Author Topic: ~ ஹக்கா மஸ்ரூம் ~  (Read 412 times)

Online MysteRy

~ ஹக்கா மஸ்ரூம் ~
« on: September 29, 2015, 08:06:54 PM »
ஹக்கா மஸ்ரூம்



தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப் (நறுக்கியது)

வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சோள மாவு கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். காளான் சோள மாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும், அதில் வெங்காயத் தாள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டால், ஹக்கா மஸ்ரூம் ரெடி!!!