Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்! (Read 1104 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
on:
September 22, 2015, 05:13:51 PM »
உணவு/சிறுதானியம்... சிறப்பு!
‘பாலீஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகள்தான் சுவையானவை; சத்தான உணவுகள் என்றாலே சுவை இருக்காது’ எனப் பலரும் தவறாக நினைக்கின்றனர். சிறுதானிய ரெசிப்பிகள் சத்தும் சுவையும் நிறைந்தவை. சூப்பில் ஆரம்பித்து ‘டெஸர்ட்’ எனப்படும் இனிப்பு வகை வரை மூலிகைகள் மற்றும் சிறுதானியங்களைக்கொண்டு சுவையான உணவுகளைச் சமைக்க முடியும். குறிப்பாக மதிய உணவு. திருச்சி, ‘ஆப்பிள் மில்லட்’ உணவகத்தின் செஃப் இரா.கணேசன் சிறுதானிய ரெசிப்பிகளை அளிக்க, அவற்றின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #1 on:
September 22, 2015, 05:17:16 PM »
தூதுவளை சூப்
தேவையானவை:
தூதுவளை (வேருடன்) - தேவையான அளவு, பட்டை -2, கிராம்பு - 4, அன்னாசிப்பூ - 4, சோம்பு , சீரகம் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு, தக்காளி - 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
தூதுவளையை வேருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, தக்காளியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் பொடித்துவைத்த பொடி, இஞ்சி பூண்டு கலவை இரண்டு டீஸ்பூன் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதிவந்ததும், தூதுவளை சாற்றைச் சேர்க்க வேண்டும். இது, நன்கு கொதித்ததும் ஏற்கெனவே வதக்கிவைத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். கடைசியில், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், சூப் ரெடி.
பலன்கள்:
மிளகுத் தூள் சேர்த்துத் தூதுவளை சூப் சாப்பிடலாம். சளி, கோழை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்குத் தூதுவளை சூப் நல்ல மருந்து. நெஞ்சுச்சளி, குடல்சளி இரண்டையும் தூதுவளை அகற்றும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு தூதுவளை சூப் குடிக்கலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #2 on:
September 22, 2015, 05:19:06 PM »
வரகு - மல்லி சாதம்
தேவையானவை:
வரகு - 500 கிராம், கொத்தமல்லித்தழை - 50 கிராம், பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு பல் - தலா 2, நறுக்கிய இஞ்சி - சிறிது, வேர்க்கடலை, கடலைப் பருப்பு, கடுகு, எண்ணெய் - சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
வரகரிசியைச் சுத்தம்செய்து, தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தனியாக சேர்த்து அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு, வரமிளகாய், கடுகு சேர்த்துத் தாளித்து, கடைசியாகக் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். வேகவைத்த சாதத்தில், கடாயில் இருப்பதை ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறினால், சாதம் ரெடி.
பலன்கள்:
நார்ச்சத்து, மாவுச்சத்து இரண்டும் நிறைந்தது. பித்தத்தைச் சமன்படுத்தும் கொத்தமல்லியை சாதத்துடன் கலந்து சாப்பிடுவதால், உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கும். சுவையின்மை, வாந்திப் பிரச்னை உள்ளவர்களுக்கு வரகு மல்லி சாதம் ஏற்றது. குழந்தைகளுக்குக் குறைவாக கொடுக்க வேண்டும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #3 on:
September 22, 2015, 05:21:14 PM »
காடைகண்ணி பாயசம்
தேவையானவை:
காடைகண்ணி அரிசி - 100 கிராம், தண்ணீர் - 1/4 லிட்டர், கருப்பட்டி வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் - தேவையான அளவு, முந்திரி, திராட்சை, தேங்காய் , ஏலக்காய் - தேவையான அளவு, நெய் - சிறிதளவு.
செய்முறை:
காடைகண்ணி அரிசியை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து, அரைத்துவைத்த காடைகண்ணியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து வேகவிட வேண்டும். இதற்கிடையில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். காடைகண்ணி வெந்ததும், வெல்லப்பாகை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். இறக்கும்போது, நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய், ஏலக்காய் தூளை வதக்கி, பாயசத்தில் சேர்க்க வேண்டும்.
பலன்கள்:
மாவுச்சத்து, புரதச்சத்து, துத்தநாகம் முதலான முக்கியச் சத்துக்கள் காடைகண்ணியில் இருக்கின்றன. இது சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பயன்படுகிறது. கருப்பட்டி வெல்லத்தோடு சேர்த்துச் சாப்பிடுவதால், உடனடி எனர்ஜி கிடைக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #4 on:
September 22, 2015, 05:23:22 PM »
வரகரிசி - மோர் கஞ்சி
தேவையானவை:
வரகரிசி - கால் கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - அரை கப், மோர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மாங்காய், கேரட் - தலா 100 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
வரகரிசியைக் கல் பொறுக்கி சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும். மீதம் உள்ள ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்துத் தாளித்துக்கொள்ள வேண்டும். வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் மோர் மற்றும் தாளித்தவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிண்டி, உப்பு, பெருங்காயத் தூள் தூவி கஞ்சியாகப் பருகலாம்.
பலன்கள்:
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #5 on:
September 22, 2015, 05:25:09 PM »
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை:
விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, எலுமிச்சை சிறியது - 1, உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிதளவு.
செய்முறை:
நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எழுமிச்சைச்சாறு, உப்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பருகவும்.
பலன்கள்:
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது. சளிப்பிடிக்கும் என நினைப்பவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225182
Total likes: 28387
Total likes: 28387
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!
«
Reply #6 on:
September 22, 2015, 05:31:02 PM »
வாழைப்பூ வடை
தேவையானவை:
வாழைப்பூ - ஒன்று, நீர் மோர் - 250 மி.லி., நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, சோம்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - சிறிதளவு, கடலைப் பருப்பு - 100 கிராம், இஞ்சி - சிறிய துண்டு.
செய்முறை:
கடலைப் பருப்பை ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூவை ஆய்ந்து மோரில் போட வேண்டும். பிறகு, மோரை வடித்து நறுக்கிய வாழைப்பூவை உப்புச் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, மாவைப் பருப்பு வடை போலத் தட்டி, கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.
வேர்கடலைத் துவையல்
தேவையானவை:
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 200 கிராம், பூண்டு - 10 பல், பெரிய வெங்காயம் - 1, உப்பு , எண்ணெய் - தேவையான அளவு, உளுந்து - அரை தேக்கரண்டி, இஞ்சி - சிறிய துண்டு, கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலை, பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் கெட்டி சட்னி பதத்தில் அரைக்க வேண்டும். பிறகு, கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை, உளுந்து, கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். தாளிக்காமலும் சாப்பிடலாம்.
பலன்கள்:
துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள்தான், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். வாழைப்பூ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். பெண்களுக்குக் கர்ப்பப்பை சீராகச் செயல்படத் துணைபுரியும். வாழைப்பூவை வடை போல செய்து சாப்பிடும்போது, உடல் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.
வேர்க்கடலைத் துவையலில் புரதச்சத்து அதிகம். தாதுஉப்புகளும் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ ஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்!