Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
ஜோதிடம்
»
2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள் (Read 6546 times)
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
on:
September 18, 2015, 07:24:04 PM »
2015 குருப் பெயர்ச்சி பலன்கள்!
குருப் பெயர்ச்சி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #1 on:
September 18, 2015, 07:28:23 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
கற்பூர புத்தி உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்து, தாயாருடன் கசப்புணர்வுகளையும், அவருக்கு மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுப்பதுடன், உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும்.
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தும் பல மருந்துவர்களிடம் ஆலோசித்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்தீர்களே! இப்போது அழகு, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். பாகப்பிரிவினை பிரச்னை சுமூகமாகும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும். இனி அவருக்கு ஆரோக்யம் கூடும். முதுகு, மூட்டு வலி, தலைச்சுற்றல் நீங்கும். சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். தாயாருடனான மோதல்கள் விலகும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள்.
நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோவிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக் கடனையும் செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். அவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் எப்போது பார்த்தாலும் உங்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருந்துக் கொண்டேயிருந்ததே! இனி அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். அடகிலிருந்த வீட்டு பத்திரங்கள், நகைகளையெல்லாம் மீட்பீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாற்று மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தொழிலதிபர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவர் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்தை கூடுதல் செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் இருந்த பின்னடைவு நீங்கி சாதகமான தீர்ப்பு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிகள் தேடி வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். சில நாட்கள் தூக்கம் குறையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வீடு கட்டி குடிப் புகுவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அசதி, சோர்வு, செரிமானக் கோளாறு, யூரினரி இன்பெக்ஷன் வந்து நீங்கும். தனிமையில் அமர்வதை தவிர்க்கப்பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு உண்டு. இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
சிலர் உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். என்றாலும் மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். வி.ஐ.பிகளுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், சளித் தொந்தரவு, காய்ச்சல், கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். நெடுங்காலமாக நெருங்கிப் பழங்கியவர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் அதிகமாகும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். அவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். என்றாலும் வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். முக்கிய கோப்புகளையெல்லாம் கவனமாக கையாளுங்கள்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். சுமூகமாக பேசி தீர்க்கப் பாருங்கள். அதற்காக வழக்கு, வியாஜ்யம் என்று நேரத்தை விணடித்துக் கொண்டிருக்காதீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம், அதிக சுதந்திரம் தரவும் வேண்டாம். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்ன சின்ன அபராத தொகை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக் கூடும். மனைவிக்கு வீண் டென்ஷன், நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்துப் போகும்.
வியாபாரிகளே! உப்பு விற்க போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக உங்கள் தொழிலை இயற்கைக் கூட சோதித்ததே! எதைச் செய்தாலும் நஷ்டங்கள் தானே மிஞ்சியது, இனி மாறுபட்ட அணுகுமுறையால் அவற்றை யெல்லாம் சரி செய்வீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வியாபார சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். கடையை விசாலமாக்குவீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.
வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொண்டு இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவியால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக வராமலிருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றி விட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! நாலாப்புறமும் பந்தாடப்பட்டீர்களே! கடினமாக உழைத்தும் அவமானங்களையும், அவப்பெயர்களையும் சந்தித்தீர்களே! உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களுக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! அதிகாரிகளையும் திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! இனி அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு இனி மாறும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு, வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். போலிக் காதலை உண்மையென நினைத்து ஏமாந்தீர்களே! அந்த மன உளைச்சலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே! என்று வருந்தினீர்களே! இனி உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். கல்வித் தகுதிக் கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடனான மோதல்கள் விலகும்.
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சக மாணவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். விளையாட்டு, கலை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் உறுதுணையாக இருப்பார்.
கலைத்துறையினரே! வெளியிடப்படாமல் இருந்த உங்களுக்கு படைப்புகள் ரிலீசாகும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
பரிகாரம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவளைக்கைநாயகி உடனுறை ஸ்ரீவில்வவனேசுவரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #2 on:
September 18, 2015, 07:32:42 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
உழைப்பால் சாதிப்பவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்கவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பிகளுடனான பகைமை விலகும். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்குவீர்கள்.
என்றாலும் நீங்கள் கொஞ்சம் முன்எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதுடன், கொஞ்சம் கடினமாகத் தான் உழைக்க வேண்டி வரும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் நடத்தை கோலங்கள் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.
மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அதேப் போல முறையான அரசாங்க அனுமதியின்றி கூடுதல் தளமோ, அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து இடத்தை விரிவுப்படுத்தி வீடு கட்டுவதோ அல்லது கடையை விரிவுப்படுத்துவதோ வேண்டாம். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தின் பொருட்டு அல்லது கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகளால் பிரிவுகள் ஏற்படக்கூடும். உங்களின் கோபதாபங்களையும், கூடாப்பழக்க வழக்கங்களையும் உங்கள் மனைவி சில சமயங்களில் சுட்டிக் காட்டுவார்.
அதற்காக அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ளாமல் திருத்திக் கொள்வது நல்லது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு, இருக்கும் ஊரை விட்டு அல்லது நாட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி காட்டாமல் அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். உணவு விஷயங்களில் நாக்கை கட்டுபடுத்துங்கள். எந்த வேலையை செய்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சிலர் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் அல்லது எல்லைப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். பகட்டிற்காகவும், கௌரவத்திற்காகவும் வீண் செலவுகள் செய்துக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். கோவில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சிலர் காரியம் ஆகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் ஆனப் பிறகு கறிவேப்பில்லையாக தூக்கி எறிகிறார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி முன்னேறுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலைத் தருவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தர முடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சோப்பு, ஷாம்புவை மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தாயாருடன் வீண் விவாதங்கள், அவருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமண விஷயத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்து விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். பெற்றோருடனான மனவருத்தம் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீட்டில் கூடுதலாக அரை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாக தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் ஃபோன் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் பரவும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
வியாபாரிகளே! கண்ட படி கடன் வாங்கி தொழிலை விரிபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே! அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப்பாருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு, வாயில் தோசை என்று கறாராக இருங்கள். இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் யோசித்து சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து பிறகு கையப்பமிடுவது நல்லது. அவசரப்பட வேண்டாம். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களை முழுமையாக நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளையும், விளம்பர யுக்திகளையும் கையாளுவது நல்லது.
உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். மறைமுகப் பிரச்னைகளும் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். குருபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும், அவற்றை முறியடித்துவிடுவீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
கன்னிப்பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். தாயாருடன் விட்டுக் கொடுத்து போங்கள். பெற்றோரைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வேற்றுமாநிலத்தில், வெளிநாடு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நயமாகப் பேசுபவர்களையெல்லாம் நம்பி ஏமாற வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் சந்தேகங்களையெல்லாம் ஆசிரியரிடம் கேட்க தயங்க வேண்டாம். உங்களுடைய மொழியறிவுத் திறன், பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். உயர்கல்விக்காக எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சற்று தள்ளிப் போகும். வேற்றுமொழி வாய்ப்புகளால் பிரபலமாவீர்கள்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர்-அந்திலி கிராமம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #3 on:
September 18, 2015, 07:37:07 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்
இரக்க குணம் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. சவால்களை சமாளிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தந்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். வசதி, செல்வாக்கு உள்ளவர்களின் பேச்சை கண்டு மயங்கி தவறான பாதையில் சென்று விட வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் கூட பெரிய சண்டையில் போய் முடியும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவியிடம் எதையும் மறைக்க வேண்டாம். அவருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். முக்கிய விஷயங்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையெல்லாம் சிலர் பரப்புவார்கள்.
வங்கி சேமிப்புக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வெளிவட்டாரத்திலும் நிதானம் அவசியம். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில நேரங்களில் தன்னம்பிக்கையில்லாமல் போகும். கடந்த காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். இப்போது அது மாதிரியான வாய்ப்புகள் வந்தால் நான் மிக அருமையாக செய்து முடிப்பேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்வீர்கள். போனது போகட்டும் இனி வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்துப் போகும். சிலர் உத்யோகத்தின் பொருட்டு மனைவியை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
உங்களின் 7-ம் வீட்டை குரு தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலை உருவாகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழிபிதுங்கி இருந்தீர்களே! இனி முழு கடனையும் பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு இல்லாவிட்டாலும், ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்தபடி நல்ல பெண் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.
உங்களது லாப வீடான 11-வது வீட்டை குரு தனது 9-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் உடனே முடிக்க முடியாமல் போகும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முன்கோபம் குறையும். சாந்தமாவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதிப் பெருகும். எதிர்பார்த்து ஏமார்ந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசுக் காரியங்கள் இழுபறியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வருங்காலம் பற்றிய பயம், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உதவாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே மாற்றுவழி யோசிப்பது நல்லது.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்துகள், மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் லேசான தலை வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புது முயற்சிகளோ, பெரிய முதலீடுகளோ வேண்டாம். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுங்கள். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். விட்டுக் கொடுத்து போங்கள்.
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் சற்று தாமதமாகும்.
கன்னிப்பெண்களே! கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித்தள்ளுங்கள். இரும்பு, கால்சீயச் சத்து உடம்பில் குறையும். மேலை நாட்டு உணவு தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். ஃபேஸ் புக், இமெயிலை எல்லாம் கவனமாகப் பயன்படுத்துங்கள். வேலைக் கிடைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.
பரிகாரம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வை இழந்தவர்களுக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #4 on:
September 18, 2015, 07:43:35 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்
புதுமை விரும்பிகளே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சல்களையும், கஷ்ட, நஷ்டங்களையும், டென்ஷனையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! மருந்து, மாத்திரையுமாக உங்களைப் பாடாய்ப்படுத்தினாரே! வாழ்க்கையில் ஒருவித வெறுப்புணர்வையும், எப்போதும் கசப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்தாரே! அவமானங்களாலும், பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டீர்களே! குடும்பத்தினர் கூட உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்தார்களே! இப்படி பலவகையிலும் உங்களை அலைக்கழித்து, எதிர்காலம் என்னவாகுமோ என்றெல்லாம் அச்சுறுத்திய குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டங்கள் நீங்கும்.
சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். வீட்டில் சாதாரணமாகப் பேசினால் கூட பிரச்னைகள் வெடித்ததே! இனி இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து திணறடித்ததே! இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்களிடம் கடன் வாங்கிவிட்டு இதோ, அதோ என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தொகையை திரும்பித் தருவார்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் சந்தோஷம் குடி கொள்ளும். புயல் வீசிய உங்கள் இல்லத்தில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். தோற்றப் பொலிவுக் கூடும்.
ஒன்றுமே இல்லாத சின்ன விஷயத்திற்கு கூட இந்த பிரச்னை இப்படியாகுமோ, அப்படியாகும் என்றெல்லாம் உங்கள் அடிமனதில் ஒரு கவலையுடன் நிம்மதியான சாப்பாடு, தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நிம்மதியாக சாப்பிடுவீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். வங்கியில் அடகு வைத்திருந்த நகை, வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும்.
குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையத் தொடங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.
உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் பழைய சொந்தங்கள் தேடி வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் அமையும். விசா பெறுவதில் தடையிருக்காது. மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது முதலீடுகள் செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மலையாளம், தெலுங்குப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வழக்கு மூலம் பணம் வரும். மகளுக்கு வரன் அமையும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், லேப்-டாப், செல் ஃபோன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணம் வந்துப் போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிப்பது நல்லது.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். சொத்து சேர்க்கை உண்டாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதிக் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
வியாபாரிகளே! தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளால் கையை சுட்டுக் கொண்டீர்களே! கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனைகள் வெடித்ததே! அந்த அவல நிலையெல்லாம் மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீரும். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாட்கள் உங்களை நிலை குலைய வைத்தார்களே! இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை நீக்கி விட்டு உங்களுக்கு தகுந்தாற் போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், ஸ்டேஷனரி, துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! இரவு பகலாக உழைத்தும் பலனில்லையே! உங்களுடைய திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறினார்களே! இனி அந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுத்தி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
கன்னிப்பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். அலர்ஜி, வயிற்று வலி விலகும். ஆடை அணிகலன்கள் சேரும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியும் என கலங்க வேண்டாம். விரைவிலேயே கெட்டி மேளம் உண்டு.
பெற்றோரின் ஆதரவு கிட்டும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்புக் கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். பழைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.
பரிகாரம்:
கொல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமூகாம்பிகையை பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #5 on:
September 18, 2015, 07:48:17 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்
அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு கைமீறிய செலவுகளையும், வீண்பழி, பகை, தூக்கமின்மை என அடுக்கடுக்க சிக்கல்களை தந்து உங்கள் நிம்மதியை சீர் குலைத்துக் கொண்டிருந்த குருபகவான் இப்பொழுது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துப் போகும். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அசைவ, கார உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். துரித உணவுகள், லாகிரி, வஸ்துக்களை அறவே தவிர்த்துவிடுங்கள். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். செரிமானக் கோளாறு, தோலில் அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், அலர்சர், ஒற்றை தலை வலி, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கால்சியம் பற்றாக்குறை, காய்ச்சல், மஞ்சள் காமாலை வரக்கூடும். பச்சை காய்கறி, கீரை, கனி வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவுகளால் பிரிவுகள் வரக்கூடும். ஈகோப் பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள்.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். யாருமே உண்மையான பாசத்துடனோ, அன்புடனோ பழகுவதில் என்று வருந்துவீர்கள். தன்னம்பிக்கை குறையும். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பதாக உங்களுக்குள்ளேயே ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். அதேப் போல பிரச்னைகளை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். எதைத்தொட்டாலும் பிரச்னையென்றெல்லாம் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு அவேசமும் அவ்வப்போது வெளிப்படும். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். குறுக்கு வழியில் சென்று ஆதாயம் தேட வேண்டாம். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அதையெல்லாம் பார்த்து படபடப்பாகாதீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அடிக்கடி கர்ப்பச்சிதைவானவர்களுக்கு இனி புத்திர பாக்யம் கிடைக்கும். மகளின் கோபம் குறையும். உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார். மகனுக்கிருந்து வந்த கூடா நட்பு விலகும். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க நன்கொடை வழங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் செயற்கரிய காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்தாலும் அன்புக் குறையாது. மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவமளிப்பீர்கள். அவர்வழி சொந்தங்களும் மதிக்கத் தொடங்குவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து போனதே! இனி ஆரோக்யம் மேம்படும். அவருடனான மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கி தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஒருவித வெறுப்பு, சலிப்பு, வீண் டென்ஷன், பண இழப்பு, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், வீண்பழி, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தின் மீது பற்றின்மை வந்துப் போகும். தனிமையில் அமர்வதை தவிர்க்கப் பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் சேவகாதிபதியும்-ஜுவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடிவேலைச்சுமை, சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் வந்துப் போகும். குடும்பத்தில் குழப்பமும், ஒருவருக் கொருவர் சந்தேகமும் வந்துபோகும். அடிக்கடி மருத்துவச் செலவுகளும் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், மரியாதைக் குறைவான சம்பவங்கள், காய்ச்சல், சளித் தொந்தரவு, இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் உங்கள் ராசியில் அமர்வதால் அடிவயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வேனல் கட்டி, வீண் பகை, மனஇறுக்கம் வந்துச் செல்லும். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்துச் செல்லும். சில விஷயங்களில் திட்டமிட்டவை ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, வீட்டு வரி, தண்ணீர் வரி, விற்பனை வரிகளையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் செலுத்தப்பாருங்கள்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்யம் சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும். புது வேலைக் கிடைக்கும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிறர் மீது நம்பிக்கையின்மை, சின்ன சின்ன மனசஞ்சலங்கள், தோல்விமனப்பான்மை வந்துச் செல்லும். உறவினர்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணம், பத்திரங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வது நல்லது.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால் பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரிகளே! நெருக்கடிகள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். புது முதலீடுகளே, முயற்சிகளோ வேண்டாம். அன்றாட சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
உத்யோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியது வரும். இதனால் வீட்டிற்கு தாமதமாகத் தான் வர வேண்டியிருக்கும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
கன்னிப் பெண்களே! அன்பாக பேசுபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! வகுப்பறையில் அரட்டை அடிக்க வேண்டாம். கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் சரியாக பயன்படுத்தப்பாருங்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
பரிகாரம்
நாகப்பட்டினம் அருகில் திருப்புன்கூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசவுந்திரநாயகி உடனுறை சிவலோகநாதரை அமாவாசை திதி நாளில் சென்று வணங்குங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #6 on:
September 18, 2015, 07:51:47 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி
கனிவாகப் பேசி காய் நகர்த்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்களின் விரைய வீடான 12-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் முன்னேற்றம் பெரிதாக தடைபடாது. கொஞ்சம் சிக்கனத்தை மட்டும் கடைபிடிப்பது நல்லது. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச் செலவுகளும் வந்தவண்ணம் இருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கரை உள்ளவர்கள் யார் என்பதனைப் புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். குடும்பத்தில் யாரும் உங்களை மதிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வீர்கள். மனைவி அவ்வப்போது கோபப்படுவார். எந்த சூழ்நிலையிலும் அவரை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள்.
உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலையும் வந்து நீங்கும்.
மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த கால சுகமான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும்.
குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவரைப் புரிந்துக் கொள்வீர்கள். அம்மான், அத்தை வகையில் இருந்து வந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டை மாற்றி அமைதியான சூழல் உள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். அரசாங்க அனுமதி கிடைத்து சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதுசு வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள்.
உங்களது 6-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சில சமயங்களில் எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமொழி பேசுபவர்கள், மதத்தினர்களால் உதவிகள் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
குரு தனது 9-ம் பார்வையால் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களது பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும் என்றாலும் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்விர்கள். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் நாட்டமின்மை, வீண் சந்தேகம், இழப்புகள், ஏமாற்றங்கள், திடீர் பயணங்கள், மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் தன-பாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளி சாமான்கள் வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் விரையாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செவதால் அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடிப்பீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசிக்குள் குருபகவான் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒருவித படபடப்பு, வீண் பிடிவாதம், தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி வந்து நீங்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். குடும்பத்திலும் பிரிவுகள் உண்டாகும். உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் உங்கள் ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஆரோக்யம் சீராகும். மனஇறுக்கங்கள் விலகும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். தைராய்டை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தந்தையாருடன் மோதல்கள் வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
வியாபாரிகளே! அறிவுப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் முடிவெடுக்கப் பாருங்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டப்பாருங்கள். கடன் வாங்கி புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள், நவீனமாக்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்களை நயமாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். தரமான சரக்குகளை விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். வேற்றுமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகஸ்தர்களே! மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலட்சியம் வேண்டாம். பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும், உங்களை குறை கூறத்தான் செய்வார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அவ்வப்போது வருந்துவீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! உங்களின் நட்பு வட்டம் விரியும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். வருடப் பிற்பகுதியில் கெட்டிமேளச்சத்தம் வீட்டில் கேட்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மாணவ-மாணவிகளே! ஏதோ படித்தோம் பரீட்சையில் பாசாகிவிடுவோம் என்று கனவு காணாதீர்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். தெரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேச வேண்டாம். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.
பரிகாரம்
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயுளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #7 on:
September 18, 2015, 07:56:04 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம்
பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10&ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வியாபாரத்தை தொடங்கினாலும் அதில் நட்டத்தையும், கடனையும் ஏற்படுத்தினரோ! அடுக்கடுக்கான வேலைகளை தந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கினாரே! வாக்குறுதிகளை தந்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் கூனிக்குறுகி நின்றீர்களே! பல காலமாக நெருங்கிப் பழகியவர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டார்களே! சொந்த&பந்தங்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகளை ஏற்படுத்தினரே! எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் திணறடித்தாரே! இது நாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே!
குடும்பத்தில் உள்ளவர்களும், உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் போனார்களே! இப்படி பல வகையிலும் உங்களுக்கு தலைக்குனிவையும், வீண் பழிச் செல்லையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து இனி வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். முன்பு சவாலாகத் தெரிந்த வேலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
மனைவியுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை மூண்டதே! பல நேரங்களில் மௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். கணவன்&மனைவியிடையே தாம்பத்தியம் இனிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதுப் பதவி, பெறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். மூத்த சகோதர வகையில் சகோதரங்கள் ஆதரவாகப் பேசுவதுடன், பொருளுதவியும் செய்வார்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இட வசதி, காற்றோட்ட வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே! இனி நல்ல வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.
முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்ப்புகள் குறையும். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மற்றவர்களின் தயவின்றி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். இளைய சகோதரிக்கு நிச்சயமாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.
உங்களின் 3&ம் வீட்டை குரு பார்ப்பதால் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வழக்கு சாதகமாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குலதெய்வக் கோவிலுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.
குரு தனது 7&ம் பார்வையால் உங்களின் 5&ம் வீட்டை பார்ப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். அடிமனசில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணி பாதியிலே நின்ற போனதே! இனி வங்கி கடனுதவியுடன் முழுமையாக வீடு கட்டி முடிப்பீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சமாளிக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சின்ன சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் ராசியாதிபதி&அஷ்டமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஹார்மோன் பிரச்னைகள், கழுத்து வலி, மூட்டு வலி, பின் மண்டை வலி வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1&ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2&ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பல வேலைகளையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1&ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வீண் பிடிவாதம், முன்கோபம் வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களை சிலர் பரப்புவார்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்யம் சீராகும். கணவன்&மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். சுற்றுலா தளங்களுக்குச் சென்று வருவீர்கள். தேமல், அலர்ஜி நீங்கும்.
வியாபாரிகளே! போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று பல முறை பெருந்தொகை போட்டு மாட்டிக்கொண்டீர்களே! அந்த அவலநிலை மாறும். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். உங்களை விட வயதில், தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைத்ததே! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கன்னிப்பெண்களே! பகல் கனவுகள் கண்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி அதை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் இறங்குவீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். கல்யாணமும் கூடி வரும். உங்கள் ரசனைக் கேற்றபடி நல்ல கணவர் அமைவார். கை, காலெல்லாம் சில நேரம் மரத்துப் போனதே! இனி உடலில் புது ரத்தம் பாயும். உற்சாகம் தங்கும். புது வேலை அமையும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.
மாணவ&மாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்று, ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
கலைத்துறையினரே! திறமையிருந்தும் வாய்ப்புகள் நழுவிக் கொண்டே போனதே! அந்த நிலை மாறும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள். வருமானம் உயரும்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள எஸ்.புதூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு சனத்குமாரேஸ்வரரை ஏதேனும் ஓரு வெள்ளிக்கிழமையில் வணங்குங்கள். காது கோளாதவர்களுக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #8 on:
September 18, 2015, 08:02:00 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்
போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே! உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலைகளையெல்லாம் சரியாக பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது.
என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும்.
இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருந்துக் கொண்டேயிருக்கும். உதவுவார்கள் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் உங்களை உதரித்தல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே மாற்று ஏற்பாடுகளை கவனிப்பது நல்லது. கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். ஒரே சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வண்டி வாங்குவீர்கள்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள்.
உங்களின் 6-ம் வீட்டை குரு தனது 9-ம் பார்வையால் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சில வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அக்கம்-வீட்டாருடன் அணுசரனையாக சூழ்நிலை உருவாகும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது வாய்ப்புகள் வரும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். வீண்பழி, விபத்து, இழப்பு, உடல் நலக்குறைகள் வந்து போகும்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் விரையாதிபதியும்-சப்தமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனைவிவழியில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். அவ்வப்போது மனைவியின் ஆரோக்யமும் பாதிக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களின் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பால்ய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நரம்புச் சுளுக்கு, கணுக்கால் வலி வந்துப் போகும்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி, தேமல் வந்துப் போகும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலைக் கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழி சொத்துகளும் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கனவுத் தொல்லை குறையும். ஆழ்ந்த உறக்கம் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகளே! வழக்கமான லாபம் உண்டு. போட்டியாளர்களை சமாளிக்க விளம்பர யுக்திகளை கையாளுங்கள். பழைய தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது. சிலரின் தவறான ஆலோசனைகளை ஏற்காதீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். புதிதாக பங்குதாரர்களை சேர்க்கும் போது சட்டப்படி உரிய ஆவணங்களில் எழுதி பிறகு கையப்பமிட்டு சேர்த்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால் வழக்கறிஞரின் ஆலோசனையையும் ஏற்பது நல்லது.
உத்யோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளை அலுவலகத்தில் பரப்புவார்கள். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். அலுவலகத்தில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்னைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. மறதி, கவனக் குறைவால் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். புது வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சக ஊழியர்களால் சில இன்னல்கள் வரத்தான் செய்யும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். பதவி உயர்விற்காக போராட வேண்டி வரும்.
கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என தெரியாத காதலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். படிப்பில் தடை வரக்கூடும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல் பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. புதிய நட்பால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பசியின்மை, ஹார்மோன் கோளாறு வரக்கூடும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். விளையாட்டு விளையாட்டு என்றிருக்காமல் படிப்பில் அக்கறை காட்டுங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். வகுப்பறையில் முன் வரிசைக்கு அமருங்கள். விடைகளை எழுதி பாருங்கள். வேதியில், உயிரியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கலைத்துறையினரே! உங்களை பற்றிய, விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட நேரிடும். பழைய சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் வயது தீபமேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #9 on:
September 18, 2015, 08:07:14 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - தனுசு
சுய கௌரவமும், தன்மானமும், பிறர் உழைப்பில் வாழ விரும்பாத குணமும் உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், வீண் விரையங்களையும், பணப்பற்றாக்குறையையும் கொடுத்து வந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து, எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சில சமயங்களில் நமக்கு சரியாக வாழத் தெரியவில்லையோ என்றெல்லாம் யோசித்தீர்களே! இனி இப்படித் தான் வாழ வேண்டுமென்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும். குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த நிலை மாறும்.
எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நெடுநாள் கனவாக இருந்து வந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டீர்களே! இனி சாந்தமாகப் பேசி சாதிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய பொருட்கள், சமைலறை சாதனங்களை மாற்றுவீர்கள். அடகிலிருந்த பத்திரத்தை மீட்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியதுப் போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பணவரவு சரளமாக வருவதால் வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். துவண்டிருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி நாலு காசு எடுத்து வைக்கு அளவுக்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போல காணப்பட்டாலும், தன் காரியத்தை சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே, அந்த அவல நிலை மாறும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கல்யாணத்தை கோலகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உத்யோகம் அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சின்ன சின்ன வேலையை தொட்டால் கூட தடங்கலானதே! இனி முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள். இளைய சகோதர, சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பாசமழைப் பொழிவார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி ஒய்யாரமாக செல்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். நல்ல வசதியான வீட்டில் குடி புகுவீர்கள். சிலர் லோன் வாங்கி சொந்த வீடு வாங்குவீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்காலத்தில் அக்கறைக் கொண்டு உங்களின் அனுபவ அறிவை பயன்படுத்தி அறிவுரைகளை தருவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
குரு தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் எவ்வளவோ மருத்துவ சோதனைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து, பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடியும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் சஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதிப் பெருகும். பணப்புழக்கம் அதிமாகும். ஷேர் மூலமாக பணம் வரும். என்றாலும் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தோலில் நமைச்சல், தடிப்பு வந்துப் போகும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையில் ஆரோக்யம் சீராகும். அவர்வழியில் உதவிகளும் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துப் போகும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் புதுத் தெம்பு பிறக்கும். என்றாலும் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். யாருக்காகவும் எந்த வாக்குறுதிகளும் தர வேண்டாம். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விலகுவீர்கள்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன்-மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.
வியாபாரிகளே! சோர்ந்திருந்த நீங்கள் இப்போது புத்துயிர் பெறுவீர்கள். தொழிலில் ஒரு ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். பெட்ரோ-கெமிக்கல், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பிரச்னை கொடுத்து வந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஏற்ற பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும்,பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணி நிரந்தரமாகும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். பதவி, சம்பள உயர்வு உண்டு. சிலர் அலுவலகம் சம்பந்தமாக வெளிநாடு, அண்டை மாநிலம் சென்று வருவீர்கள்.
கன்னிப்பெண்களே! தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். சக தோழிகளுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதே என்று வருந்தினீர்களே! கவலை வேண்டாம். கெட்டி மேளச் சத்தம் கேட்கும். முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். தடைபட்ட படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்வீர்கள். கசந்த காதல் இனிக்கும்.
மாணவ-மாணவிகளே! ஆசிரியர்கள் உங்களை மட்டம் தட்டி பேசினார்களே! அவர்களே வியக்கும்படி அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சக மாணவர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். கலை, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். திரையிடப்படாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.
பரிகாரம்:
திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமல தாயாரையும் சனிக் கிழமையில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #10 on:
September 18, 2015, 08:10:45 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம்
அழுத்தமான கொள்கை கோட்பாடுகளை கொண்டவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும், செல்வாக்கையும், ஓரளவு பணவரவையும், குடும்பத்தில் சந்தோஷத்தையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் உங்கள் சொந்த முயற்சியில் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து முன்னேறப்பாருங்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட வேண்டாம். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பிறகு காசோலை தருவது நல்லது. கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். டிரைவிங் லைசன்ஸ், இன்சுரன்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா. அவற்றையெல்லாம் புதுப்பித்துவிட்டீர்களா என பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவ்வப்போது அபராத தொகை செலுத்த வேண்டி வரும்.
நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இரு5ப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். தங்க நகைகள் களவுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். தகுதியில் குறைந்தவர்கள், வயதில் குறைந்தவர்களையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். என்றாலும் வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். மனைவிக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பாதீர்கள்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களது 2-ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பழைய காலி இடத்தை விற்று புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களது சுக ஸ்தானமான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.
குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வண்டியில் வலம் வருவீர்கள். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்து சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடைகள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். குடும்பத்தில் இணக்குகள் வரும்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால்பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவ்வப்போது அவர்களின் குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
வியாபாரிகளே! போராடி லாபம் ஈட்டுவீர்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்கள் மனங்கோணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களை உற்று கவனியுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப்பாருங்கள். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. சிலர் தங்கள் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்யோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகமாகும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைபடாதீர்கள், கடமையை செய்யுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் உங்கள் மீது தவறான வழக்குகள் போட வாய்ப்பிருக்கிறது.
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். காதல் கசந்து இனிக்கும். முகப்பரு, கனவுத் தொல்லை வந்துப் போகும். கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள்.
மாணவ-மாணவிகளே! நீங்கள் மிகவும் திறமையானவர்கள்தான். ஆனால் தேர்வு நெருங்கும் நேரத்தில் மட்டும் படிக்காமல் அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் முடியுங்கள். அலட்சியப்போக்கு, வீணாக வகுப்பறையில் அரட்டை அடிப்பது என நேரத்தை வீணடிக்காதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கலைத்துறையினரே! பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மனந்தளராமல் இருங்கள்.
பரிகாரம்:
திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மணமுறிவுப் பெற்றவர்களுக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #11 on:
September 18, 2015, 08:18:10 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - கும்பம்
கடல் கடந்துச் சென்றாலும் கலாச்சாரம், பண்பாட்டை விட்டுக் கொடுக்காதவர்களே! இதுவரை உங்களுக்கு எதிரி வீடான ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்க வைத்துடன், ஏறக்குறைய ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு-7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலைகள் அமையும். எதிலும் பிடிப்பில்லாமல் எதையோ இழந்ததைப் போல் வாடி, வதங்கியிருந்தீர்களே! இனி சுறுசுறுப்பாவீர்கள்.
அழகு, ஆரோக்யம் கூடும். முகம் மலரும். எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே! யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்பித் தவித்தீர்களே! பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்கு பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களை தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! மற்றவர்களுக்காக இரக்கப்பட்டு ஏமாற்றங்களை சந்தித்தீர்களே! கொடுத்தப் பணத்தை கேட்கப் போய் பொல்லாப்பானதே!
அடிக்கடி விபத்துகளையும் சந்தித்தீர்களே! வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னைகளாலும் கணவன்-மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். பழுதாகிக் கிடந்த வாகனம் ஓடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க முடியாமல் போன காரியங்களையெல்லாம் இனி முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். எதிர்ப்புகளெல்லாம் குறையும்.
உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சங்கம், டிரஸ்டில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பேசி முடித்து பாதியிலேயே நின்று போன திருமணம் இனி நல்ல விதத்தில் முடியும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழியில் இருந்து வந்த மனவருத்தங்களும் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களைக் குறைக் கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்குச் சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புது வழி, வகைப் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களைத் தாழ்திப் பேசியவர்களெல்லாம் திருந்துவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பால்ய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். என்றாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த செல்போன், லாப்-டாப், டேப் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். தாயார் மற்றும் தாய்வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் ரசனைக் கேற்ற வீடு, வாகனம் அமையும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறை, வீண் அலைச்சல், முன்கோபம், வாகன விபத்துகள், உறவினர் பகை வந்துச் செல்லும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி வரும். பிள்ளைகள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவனைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிக்கு முதுகு வலி, தைராய்டு பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளே! கடுமையான போட்டிகளும், சூழ்ச்சிகளும் நிலவியதே! சிலரின் தவறான வழிகாட்டுதலால் கடன் வாங்கி முதலீடு செய்தும் லாபம் பார்க்க முடியாமல் திணறினீர்களே! உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையாட்களுக்கு தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்த உங்களையே பதம் பார்த்தார்களே! சில சமயங்களில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்களே! இனி உங்களைப் புரிந்துக் கொண்டு உங்களை மதிக்கும் வேலையாட்கள் அமைவார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உங்களின் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, லாஜிங், போடிங் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை குறையும். உங்களை விட கல்வித் தகுதியில், வயதில் குறைவானவர்களிடம் எல்லாம் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிப்புரிவீர்கள். மேலதிகாரியுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். மாதவிடாய்க் கோளாறு நீங்கும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி லட்சியத்தோடு படிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பட்டிதொட்டியெங்கும் நீங்கள் பரவலாக பேசப்படுவீர்கள். உங்களின் யதார்த்தமான படைப்புகளால் மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.
பரிகாரம்:
திருவண்ணாமலை-கடுவனூருக்கு அருகிலுள்ள சங்கராபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாண்டேஸ்வரரையும், ஸ்ரீசிவகாமி அம்மையாரையும் வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள். மகப்பேறு இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.
Logged
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1290
Total likes: 1290
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: 2015 குருப் பெயர்ச்சி பலன்கள்
«
Reply #12 on:
September 18, 2015, 08:23:14 PM »
குரு பெயர்ச்சி பலன்கள் - மீனம்
பிறரின் குறைகளை குறைத்துப் பார்ப்பதுடன், நிறைகளை நிறைவாகப் பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஒரளவு அடிப்படை வசதி, வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! சங்கடங்களையும், சச்சரவுகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். அதன்படி எதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள்.
அவ்வப்போது நெருக்கடிகள், தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதியும் தர வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சகட குருவாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், வீண் சந்தேகத்தால் பிரிவு, டென்ஷன், எதிர்ப்பு, உடல் நலக்குறைவுகள் என வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.
ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். தலைச்சுற்றல், நெஞ்சு எரிச்சல், நீரிழிவு நோய் வரக்கூடும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். மனைவிக்கும் கர்பப்பை சம்பந்தப்பட்ட ஃபைப்ராய்டு, நீர் கட்டிகள், தைராய்டு போன்ற பிரச்னைகள் வந்துப் போகும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்.
உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கழிவு நீர் அடைப்பு, கூடுதல் அறை கட்டுவதற்காக வீட்டை இடித்து மாற்றுவீர்கள். சிலர் நீங்கள் முன்பு போல் இல்லையென்றும் மாறி விட்டதாகவும் கூறுவார்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இதமாகப் பேசி காரிய சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆரோக்யம் சீராகும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப் போன உங்கள் மகளின் கல்யாணத்தை பிரபலங்களின் முன்னிலையில் நடத்துவீர்கள். பாதியிலேயே நின்று போன கட்டிட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்துப் போகும். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஊர் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்களால் திணறுவீர்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். மனைவியைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யூரினரி இன்பெக்ஷன், அலர்ஜி வந்துப் போகும். உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலைக் கிடைக்கும். பழைய ஆபரணங்களை மாற்றிவிட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் வீண் விரையங்கள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம், சின்ன சின்ன ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிறர் தன் வேலையாகும் வரை தன்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எரிகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துபவர்கள் தான். ஆனால் அதுவே சில நேரங்களில் தர்மசங்கடமாகும். பாக்கிகளை அலைந்து, திரிந்து வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கண்ஸ்டக்ஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கத்து கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்களை மதிக்காமல் போவார்கள். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடி பெற வேண்டி வரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது.
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள்.
கலைத்துறையினரே! மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகமாகும். படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள்.
பரிகாரம்:
கோயம்புத்தூர் அருகிலுள்ள மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தரையும், முருகப் பெருமானையும் மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
ஜோதிடம்
»
2015 குருப் பெயர்ச்சி பலன்கள்