Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இருமல் ரொம்ப கடுமையா இருந்தா...! பாட்டி வைத்தியம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இருமல் ரொம்ப கடுமையா இருந்தா...! பாட்டி வைத்தியம் ~ (Read 574 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226805
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இருமல் ரொம்ப கடுமையா இருந்தா...! பாட்டி வைத்தியம் ~
«
on:
September 15, 2015, 07:06:06 PM »
இருமல் ரொம்ப கடுமையா இருந்தா...! பாட்டி வைத்தியம்
ரெ ண்டு நாளைக்கு முன்னே பூஜை, ஜெபம்லாம் முடிச்சுட்டு, சமீபத்துல பிறந்திருக்கற என் கொள்ளுப் பேரனுக்காக ஸ்வெட்டர் பின்னிக்கிட்டு இருந்தப்போ, என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி வந்திருந்தா! ‘‘இந்த வயசிலயும் ஸ்வெட்டர் பின்னுற அளவுக்கு உங்களுக்கு கண் பார்வை துல்லியமா இருக்கே... அதோட ரகசியம் என்ன, பாட்டி?’’னு கேட்டா.
இதுல என்ன ரகசியம் இருக்கு! நினைவு தெரிஞ்ச நாள்லருந்து தினமும் அதிகாலை எழுந்து குளிச்சு முடிச்சதும், சூரிய நமஸ்காரம் பண்ண தவறவே மாட்டேன். அதான் என் கண்பார்வை துல்லியத்துக்குக் காரணம். அதிகாலை சூரிய நமஸ்காரம் நம்ம கண்ணுக்கு அவ்வளவு நல்லது!
அது போகட்டும். நானும் அந்தப் பொண்ணு வந்ததுலேருந்து பாக்கறேன்... கையை எறும்பு கடிச்ச மாதிரி சொறிஞ்சுக்கிட்டே இருந்தா. என்ன ஏதுனு விசாரிச்சேன்... ‘‘என்னன்னே தெரியலை, பாட்டி. கை முழுக்க அரிப்பா இருக்கு’’ன்னா!
அவகிட்ட ‘‘ரெண்டு மூணு நாளா என்னல்லாம் சாப்பிட்டே சொல்லு’’ன்னேன். பார்த்தா, வெண்டைக் காய் இளசா இருக்கேனு தினம் அதையே ஒரு வெட்டு வெட்டியிருக்கா. ரொம்ப சென்டிசிடிவ் தோல் உள்ள சிலருக்கு, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வெண்டைக்காய் அலர்ஜியாயிடும். அதுதான் இந்தப் பொண்ணோட அரிப்புக்கும் காரணம். ‘‘இப்போதைக்கு வெண்டைக்காய்க்கு குட் பை சொல்லு. ரெண்டு மூணு மாசம் கழிச்சி பார்த்துக்கலாம்’’னு சொல்லி அனுப்பினேன்.
வெண்டைக்காய்தான்னு இல்லே, குளிர்காலத்துல முந்திரிப்பருப்புகூட சில பேர் உடம்புக்கு சேராது! அதனால, முந்திரிப்பருப்பை அரைச்சுவிட்டு செய்யற நவரத்ன குருமா மாதிரியான அயிட்டங்களையும் இந்த குளிர் சீசன் போறவரைக்கும் தள்ளி வைக்கணும்.
சிலருக்கு என்ன அலர்ஜின்னே தெரியாம உடம்பு முழுக்க அரிப்பாகி அவதிப்படுவாங்க. அவங்க, பட்டை தீட்டாத கைக்குத்தல் அரிசியை ரொம்ப கழுவாம சமைச்சு சாப்பிட்டா, உடனே நிவாரணம் கிடைக்கும்.
இந்த முறை பனிக்காலம் என்னை மாதிரி வயசானவங்களை ரொம்பத்தான் படுத்துது! காலைல எழுந்ததுமே பனியால வாய் ஓயாத இருமல்! பார்த்தேன்... கொஞ்சம் டைமன் கல்கண்டும் ஒரு ஸ்பூன் சித்தரத்தை பொடியும் சேர்த்துப் போட்டு மென்றேன். இருமல் போயே போயிடுச்சு! நீங்களும் செஞ்சு பாருங்க.. இல்லாட்டி வெந்நீர்ல மிளகு தட்டிப் போட்டு குடிச்சு, அந்த மிளகையும் வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. இருமல் ஓடியே போயிடும் (ஒரு ஸ்பூன் நெய்ல அஞ்சு மிளகை பொரிச்சு, இளஞ்சூட்டுல நெய்யை சாப்பிட்டு மிளகை கடிச்சு முழுங்கினாலும் நல்ல பலன் கிடைக்கும்).
இருமல் ரொம்ப கடுமையா இருந்தா, சட்டுனு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில விட்டு மடக்குனு குடிங்க. குடிச்ச வேகத்துலயே இருமல் டப்புனு நின்னுடும். சின்ன குழந்தை கள்னா ஒரு ஸ்பூன் தேன் குடிக்க கொடுக்கலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இருமல் ரொம்ப கடுமையா இருந்தா...! பாட்டி வைத்தியம் ~