Author Topic: கவின் மலரின் கவிதை பூங்கா 3  (Read 683 times)

Offline NiThiLa

இசையின் பரிமாணங்கள்



அன்பு கொண்ட மனதின்
அழகான வெளிப்பாடு
அழும் குழந்தைக்கு தாயின் குரல்
சோர்ந்த மனதிற்கு நட்பின் ஆறுதல்
தேடல் கொண்ட காதலுக்கு
தன் இணையின் தரிசனம்
வெறுமையான மனதிற்கு
எங்கோ கேட்கும் குயிலின் குரல்
உற்சாகம் தரும் குதித்து வரும் நதியின் ஓசை
ஓய்ந்த மனதிற்கு இறைவன் கோவில் மணியோசை
இருள் சூழ்ந்த காட்டில்
அசையும் மரங்களின் ஓசை
மகத்தான வாழ்விற்கு
அன்பென்ற மந்திர இசை
இப்படி வாழ்வில் எல்லா சுழலிலும்
இனைந்து வரும் இசையின்
பரிமாணங்கள் தான் எத்தனை?


நட்பு


ஆனந்த கூச்சல்கள்
அளவில்லா சண்டைகள்
முடிவில்லா சொந்தங்கள்
மகிழ்ச்சி தரும் நினைவுகள்
வாழ்வில் சிறக்க வைக்கும் பண்புகள்
மறக்க விரும்பாத பாடங்கள்
மறக்க தோன்றும் காயங்கள்
தவிர்க்க முடியாத பிரிவுகள்
முடிவின்றி  நீளும் நிமிடங்கள்
தோள் சேர்த்து நிற்கும் கரங்கள்
தோல்வியில் விழிநீர் துடைக்கும் விரல்கள்
இன்னும் வார்த்தையில்
அடங்காத எத்தனையோ அதிசயங்கள்
அள்ளித்தரும் நட்பு என்னும் நூதன உறவு



மனம் என்னும் சர்க்கஸ்


ஒரு நிமிடம் சிங்கம்
நெருப்பு வளையத்துக்குள் குதித்து வரும்
ஒரு நொடி யானை
கூட மிதி வண்டி  ஓட்டும்
மனதின் சிறிய சந்தோஷம் கூட
ஒரு நிமிடம் மலையளவு
மகிழ்ச்சியும் வலிமையும் தரும்
கயிற்றில் அந்தரத்தில் நடப்பார் கழைக்கூத்தாடி
யாருக்கு தெரியும் கயிறு
வலிமையிழந்தால் உயிரே போகும்
மனதின் மிக சிறிய துன்பம், தோல்வி
அந்த தொடுவானத்தை
காட்டிலும் நெடியதாய்  தோன்றும்
எல்லாம் ஒரு செயலை பார்க்கும்
பார்வையாளனின் மனதை  பொறுத்தது
என்ன வினோதமான சர்க்கஸ் இந்த மனம் ?



காதல்
[/u][/size]


இளமை என்னும் பருவத்தில்
இனிமை என்னும் ராகத்தில்
இதயம் என்ற  கோட்டையில்
உயிர் என்ற மேடையில்
உணர்வென்னும் பாடலை
கண்கள் இசைக்க
உள்ளம் கொண்ட கதவுகள் திறந்து
ஜீவனெங்கும்  வியாபித்து
சுவாசம் கலந்து
மனம் என்ற கருப்பையில் உயிர் கொண்டு
மௌனம் என்ற மொழியில்
பகிரப்பட்டு பிறப்பெடுக்கும்
இரு மனம் விரும்பி அணியும்  காதல் என்ற பொன்விலங்கு



காதல்
[/u][/size]


தலை நரைத்து
தோல் சுருங்கி
கண் பார்வை மங்கி
தடியூன்றி நிற்கும்
தள்ளாத வயதிலும்
ஒவ்வொரு செயலிலும்
பார்வையால்  அன்பை சொல்லி
பரிவாய் கை கோர்த்து
மனதால், உணர்வால்
ஒவ்வொரு நொடியிலும்
உன்னோடு நான்
என்னோடு நீ
என வாழும் வரம் தருவாயா
என் உயிரில் கலந்தவனே



பாட்டியின் அன்பு
[/u][/size]


பார்வை மங்கி
தலை  நரைத்து 
தள்ளாடும் வயதிலும்
நீ வாங்கி வரும்
ஐந்து ருபாய் திண்பண்டமும்
மீண்டும் மீண்டும் கேட்டாலும்
சலிக்காது கூறிய ஐநூறு கதைகளும்
பெற்றோரிடம் அடிவாங்கி அழுத பொழுதுகளில்
அணைத்து மடி சாய்த்து
தேற்றி புரியவைத்த தவறுகளும்
பழித்தாலும் பொறுத்து கொண்டு
பரிவால் எனை வென்ற நினைவுகளாலும்
சேர்த்து வைத்த அன்பு தான்
என்  வாழ்விற்கு  ஒளிவிளக்கு




மனம்
[/u][/size] 


ஒருவருக்கு வானத்து
தேவதையின் ஆசிர்வாதம்
மற்றொருவருக்கு
மேகம் சிந்தும் கண்ணீர்
மனதிலிருந்து பிறக்கும் உணர்வு தான்
இன்பம் , துன்பம் இரண்டும்
ஆனால் விளைவு மட்டும்
ஏன் எதிரெதிராய்
இதுவும் மழை போல்
ஒரு புதிர் தான் போலும்
எல்லாம் உணரப்படும்
பார்வையாளரின் மனதை பொருத்தது



பொழுதுகளும் காதலும்
[/u][/size]


அதிகாலையில் நீ
சூரியனானால் நான் தாமரையாகிறேன்
என் முகம் பார்த்து
நீ சிந்தும் புன்னைகைக்காக
நாள் முழுவதும் தவம் செய்கிறேன்
நீ புன்னைகைத்த நொடியில்
புது ஜனனம் பெறுகிறேன்
உச்சி பொழுதில்
உன் கோபமான கதிர்களால்
நான் வாடி போகிறேன்
அந்தி பொழுதில்
குளிர் நிலவாய் வீசினால்
அல்லி பூவாக மலர்கிறேன்
உன் காலடி தொடர்ந்து வந்த நாள் முதல்
கண்ணாடியாக உன்னை
பிரதிபலித்து   கொண்டே இருக்கிறேன்



என் இனிய மந்திரக்கோலே
[/u][/size]
கண்களால் உயிர் தொட்டு
காதலாய் நீ சிந்தும் புன்னகையில்
பல நூறு ஜென்மத்து காயங்களை மறக்கிறேன்
உன் பார்வை வீச்சில் மயங்கி பேச்சிழந்து
நீ பேசும் வார்த்தைகளை
மௌனமாய் சேமிக்கிறேன்
என்னை இழுத்து தோள் சேர்க்கும்
உன் கரங்களில்
குழந்தையாய் மகிழ்ந்து போகிறேன்
காதலாய் மடி சாய்க்கும் பொழுதில்     
கைதியாய் மகிழ்வோடு
புதைந்து போகிறேன் உன்னோடு
அக்கறையாய் நீ கோபிக்கும் நொடிகளில்கூட
சர்க்கரையாய் மனம் இனிக்க
பாகாய் கரைகிறேன் உனக்குள்
உன்னை காணும் பொழுதெல்லாம்
மந்திரகோலாய் என்னை
ஆட்டுவிக்கிறாய் என் மாயவனே




தாய்
[/u][/size]


கருவறையில் உயிர் கொண்ட நாள் முதல்
பத்துமாதம் உடலில் சுமந்து
பத்திரமாய் பேணிகாத்து
பக்குவமாய் உணவு உட்கொண்டு
தன் உடல் வழியே அமுதுட்டி
எலும்புடைக்கும் வலி பொறுத்து
பத்திரமாய் உலகில் சேர்த்து
தன்  மக்களுக்காக  வாழ்வை அர்ப்பணிக்கும்
அற்புத ஜீவன் தாய்



பெண்
[/u][/size]

பெண்ணாய் பிறந்து
பெற்றோர் சொல் படிந்து வளர்ந்து
மற்றோர் இடம் சேர்ந்து
மனைவியாய் மனம் பரப்பி
தாயாய் பரிமளித்து
தள்ளாத வயதிலும்
தன் பிள்ளைக்காக 
தன்னலம் பாராது வாழும்
உன்னதமான தனி பிறவி  பெண்









« Last Edit: September 04, 2015, 04:42:01 PM by NiThiLa »
bhavadhi

Offline JoKe GuY

Re: கவின் மலரின் கவிதை பூங்கா 3
« Reply #1 on: September 13, 2015, 01:04:27 PM »
உங்களின் கவிதை பூங்கா மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.மிக அருமை.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்