Author Topic: ~ முட்டைக்கோஸ் பொரியல் ~  (Read 400 times)

Offline MysteRy

~ முட்டைக்கோஸ் பொரியல் ~
« on: September 03, 2015, 10:25:02 PM »
முட்டைக்கோஸ் பொரியல்



பெரிய முட்டைக்கோஸ் - 1,
தேங்காய் - 2 தேக்கரண்டி.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி,
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி,
மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 4 இலைகள்.

எப்படிச் செய்வது?

கோஸை அலம்பிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் கொதித்ததும் அதில் போட்டு சிவக்க வதக்கவும். நறுக்கின கோஸைப் போட்டு தண்ணீர் அளவோடு தெளித்து வேக விட வேண்டும்(அதிக தண்ணீர் என்றால் குழையும், தண்ணீரே இல்லை என்றால் அடிப் பிடிக்கும்) பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள் இட்டு மிதமான தீயில் வேகவிட்டு வாணலியை மூடி விடவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். வெந்த பிறகு பச்சைத்தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலையையும் போட்டு ஒன்று சேர்த்து கிளறி பரிமாறவும்