Author Topic: ~ கத்திரிக்காய் கடைசல் ~  (Read 352 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226798
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கத்திரிக்காய் கடைசல் ~
« on: September 03, 2015, 10:11:15 PM »
கத்திரிக்காய் கடைசல்



பெரிய கத்திரிக்காய்,
பெரிய வெங்காயம்,
தக்காளி - தலா ஒன்று,
புளிக்கரைசல் - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படி செய்வது?

கத்திரிக்காயை சுட்டு தோலுரித்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்க விட வும். பிறகு கீழே இறக்கி, மசித்த கத்திரிக்காய் சேர்த்து மத்தினால் கடைந்து, மேலே நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரி மாறவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற சை டிஷ். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.