« on: September 03, 2015, 09:54:57 PM »
பாதாம் கேக்
மைதா மாவு - 200 கிராம்,
பாதாம் பருப்பு - 25 கிராம்,
பேக்கிங் பவுடர் - 2 டீ ஸ்பூன்,
முட்டை - 2,
வெண்ணெய் - 150 கிராம்,
பாதாம் எஸென்ஸ் - சில துளிகள்,
உலர்ந்த பழங்கள் - 50 கிராம்,
முந்திரிப் பருப்பு - 25 கிராம்,
கேக் மசாலாப் பவுடர் -1/2 டீ ஸ்பூன்,
பால் - 1 டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 200 கிராம்,
சாக்லெட் எசென்ஸ் - தேவையானால்.
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பைச் சூடான நீரில் ஊற வைத்துத் தோலுரித்து, பால் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.
வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து லேசாகும் வரை குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும். மாவுடன் வெண்ணெய், சர்க்கரை குழைத்த கலவை, முட்டை இவற்றை மெதுவாக ஊற்றிக் கலக்கவும். கலக்கும் போதே பாதாம் எஸன்ஸ், கேக் மசாலாப் பவுடர், பாதாம் பருப்பு அரைத்தது, முந்திரிப் பருப்புத் துண்டுகள், மாவில் புரட்டி எடுத்த உலர்ந்த பழத் துண்டுகள் இவற்றைக் கலக்கவும். கேக் கலவையை ட்ரேயில் ஊற்றி சூடாகிக் கொண்டிருக்கும் கேக் ஓவனில் வைத்து பேக் செய்யவும்.
« Last Edit: September 03, 2015, 10:05:07 PM by MysteRy »

Logged