Author Topic: ~ சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார் ~  (Read 343 times)

Offline MysteRy

சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சாம்பார்



சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
புளி - எலும்பிச்சை பழ அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை - 5 இதழ்கள்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

தனியா - 11/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (வறுக்க வேண்டாம் )
வற மிளகாய் - 5 nos

செய்முறை

வெங்காயத்தை ஒரு கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும் ,பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு குக்கரில் குழைய வேக வைத்து கொள்ளவும்,

புளியை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊர வைத்து கொள்ளவும்.கடாயில் புளி தண்ணீரை விட்டு அதில் வதக்கிய வெங்காயம் மஞ்சள் பொடி , உப்பு ,கறிவேப்பில்லை போட்டு 1/2 மணி நேரம் கொதிக்க விடவும் ,

கடாயில் புளி தண்ணீரை விட்டு அதில் வதக்கிய வெங்காயம் உப்பு, மஞ்சள்பொடி, கறிவேப்பிலை போட்டு 1/2 நேரம் நன்றாக கொதிக்க பிறகு அதில் வேக வைத்த பருப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு அரைத்த பொருட்களை போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தழை தூவவும்