Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான வழிகள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான வழிகள் ~ (Read 365 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227487
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான வழிகள் ~
«
on:
August 30, 2015, 11:00:29 PM »
முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான வழிகள்
பப்பாளி பேக்
நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து அதில் தயிர் சேர்த்து கலந்து கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அப்படி செய்தால் முடிவெடிப்பு நீங்கி, கூந்தல் மென்மையாக இருக்கும்.
பால் மற்றும் க்ரீம்
அரை கப் பாலில் 1 ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தல் மற்றும் மயிர்க்கால்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரிசமாக எடுத்துக் கொண்டு கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைத்து, மைல்டுஷாம்பு போட்டு அலசினால் முடி வெடிப்பிலிருந்து விடுபடலாம்.
முட்டை
ஒரு முட்டையின் மஞ்சள்கருவில் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, அதனை கொண்டு தலையை மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் ஷாம்பு போட்டு அலசினால் முடிவெடிப்பில் இருந்து விடுபடலாம்
உளுந்தம் பருப்பு
அரை கப் உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்து அதனை அரை கப் தயிரில் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும்.
தேன்
1 ஸ்பூன் தேன், அரை கப் தயிரில் கலந்து கூந்தலில் தடவி 20 மணிநேரம் ஊறவைத்து நீரில் நன்கு அலச வேண்டும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால் கூந்தல் பட்டு போன்று இருப்பதோடு முடி வெடிப்பும் நீங்கும்.
அவகேடோ
அவகேடோவை நன்கு மசித்து ஈரமான கூந்தலில் தடவி 20 – 30 நிமிடம் ஊறவைத்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கான வழிகள் ~