Author Topic: ~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~  (Read 2677 times)

Offline MysteRy

அஞ்சறைப்பெட்டித் துவையல்



தேவையானவை:

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, உப்பு, புளி - சிறிதளவு, பெருங்காயம் - சிறிய கட்டி, கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், பூண்டுப்பல் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

2 டீஸ்பூன் எண்ணெயில் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுத்து, ஆறவிட்டு அரைக்க வேண்டும். பழைய சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.

பலன்கள்:

அதிகப் புரதச்சத்து நிறைந்த துவையல் இது. எளிதில் செரிமானம் ஆகும்.  குளிர்ச்சியைத் தர்க்கூடியது. செரிமானக் கோளாறு இருப்பவர்கள், இந்தத் துவையலைச் சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்றுப்புண்ணுக்கு இந்த துவையல் சிறந்தது.