Author Topic: ~ சத்தான மூலிகை சூப் ரெசிப்பிகள்! ~  (Read 637 times)

Offline MysteRy

சத்தான மூலிகை சூப் ரெசிப்பிகள்!



காபி, டீ-க்கு பதிலாக, சத்துக்களைத் தரும் மூலிகை சூப் பக்கம் ஆர்வம் திரும்புவது நல்ல விஷயம். அதிலும் ஸ்வீட்கார்ன், ஹாட் அண்டு சோர் போன்ற சைனீஸ் சூப்களுக்குப் பதிலாக, நம் மூலிகைகளால் தயாரான சூப் குடித்தால், அது பசியைத் தூண்டி, உடல் பலத்தைக் கூட்டி, ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய சூப் வகைகளைச் செய்துகாட்டியிருக்கிறார் சேலம் ‘அமுது’ உணவகத்தின் உரிமையாளர் ரத்னகுமார். அதன் பலன்களைத் தருகிறார் சித்த மருத்துவர் வெற்றிவேந்தன்.

Offline MysteRy

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்



தேவையானவை:

 நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, தக்காளி – 3, தேங்காய்ப் பால் - அரை கப், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.

Offline MysteRy

நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்



தேவையானவை:

வெங்காயம் – 2 (பெரியது), மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள்:

 நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

Offline MysteRy

சிறுநீரகம் சிறக்க வாழைத்தண்டு சூப்



தேவையானவை:

வாழைத்தண்டு – 200 கிராம், சின்ன வெங்காயம் – 1, பூண்டு பல் – 2, தக்காளி – 1, உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை:

சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டை தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு முதலானவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கி, வாழைத்தண்டுடன் சேர்க்க வேண்டும். அனைத்தும் நன்றாக வெந்ததும், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து எல்லாவற்றையும் மசித்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வாழைத் தண்டை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், மசித்து வடிகட்டியும் அருந்தலாம்.

பலன்கள்:

சிறுநீரகக் கற்களை நீக்கும். குடல்புண்களுக்குச் சிறந்த மருந்து. உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் அருந்திவர, விரைவிலேயே நல்ல பலன் தெரியும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை மற்றும் வெள்ளைப்படுதலை சரி செய்யும். நீர் சுருக்கம், நீர் கடுப்புக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

Offline MysteRy

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு சூப்



தேவையானவை:

கொள்ளு – 4 டீஸ்பூன், மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 5, தக்காளி – 2, பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

வெறும் கடாயில் கொள்ளைப் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு, அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதில், தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். நன்கு வெந்ததும் உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள்,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் தேவையற்ற நீர், நச்சுக்களை எடுத்துவிடும். புரதம் நிறைந்து இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு உதவும்.