Author Topic: காதல் கண்ணாமூச்சி  (Read 748 times)

Offline SweeTie

காதல் கண்ணாமூச்சி
« on: August 26, 2015, 12:39:35 AM »
காதல் என்ன கரும்பு சக்கையா
சப்பிவிட்டுத் துப்பிவிட
காற்றில் பறந்து செல்லும்  தூசியா
வேண்டாம் என்று விட்டுவிட
வர்ணம் தீட்டாத ஓவியமா
தூர  வீசி எறிந்துவிட
இருவர் மட்டுமே நனையும்
இனிய மழை

பட்டாம்பூச்சிகள் பறக்கும்
மின்னல் வேகத்தில் அடிக்கும் இதயம்
விண்மீன்கள் அடிகடி கண்சிமிட்டும்
குளிர் ஜுரத்தில்  உடம்பு நடுங்கும்
வானவில்லின் ஜாலம் கண்முன்னே தோன்றும்
அடிக்கடி  வாய் ஏதோ முனுமுனுக்கும்
உயிரோடு ஒட்டி உறவாடி ஆட்கொள்ளும்
காதல்

உருகி உருகி  காதலித்து
மெரசலாகி மனம் விரும்பி
சேர்த்துவைத்த முத்தமெல்லாம்
தேவையின்றி  விரயமாக்கி
கடைசியில் காணாமல் போவதுதான்
காதல்   
« Last Edit: August 26, 2015, 12:42:51 AM by SweeTie »

Offline gab

Re: காதல் கண்ணாமூச்சி
« Reply #1 on: August 26, 2015, 12:55:09 AM »
நாளுக்கு நாள் உங்கள் கவிதை மெருகேறுகிறது. வாழ்த்துக்கள் ஸ்வீட்டி.

Offline JoKe GuY

Re: காதல் கண்ணாமூச்சி
« Reply #2 on: August 31, 2015, 04:05:37 PM »
கரும்பாய் இனிக்கிறது உங்கள் கவிதை வளரட்டும் மேலும் வாழ்த்துக்கள் ஸ்வீடி


உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: காதல் கண்ணாமூச்சி
« Reply #3 on: September 13, 2015, 05:18:58 PM »
நன்றிகள் தோழர்கள்  Gab ,  Joke Guy ...இனிப்பான கவிதைகள்தானே
படிப்பவர்களுக்கு தித்திக்கும்.....