தனிமை, வெறுமை,கொடுமை ,விரக்தி 
விரக்தியின் வெளிப்பாடாய் எப்போதாவது 
ஒன்றிரண்டு கிறுக்கல்கள் 
(கவிதை ) எனும் அடைமொழியில் .
சமயத்தில், என் சமகால ஜீவன்களை
வேடிக்கையாய் வேடிக்கை பார்ப்பேன் 
சமயத்தில் , ஆச்சரியமாய் அசந்தும் ,,,
இப்படிதான் இருந்து வந்தது 
தனிமையாய்,வெறுமையாய்,விரக்தியாய் 
வெறிச்சோடி போயிருந்த என் வாழ்கை 
அலுவலக அலுவல்கள் அரை பொதி
குறைந்த ஓர் நாள் , அப்படியே காலாற 
இல்லாவிட்டாலும்  மனதார 
ஒரு அலசல் இணையத்தில் ...
இணையம் ஒரு கடல் என்பார்கள் 
பல இடத்தில் இவ்வரிகளை படித்ததுண்டு 
உண்மையில், அவ்வரிகள்  எத்துனை உண்மை  என்று 
உள்ளத்தாள் உணர்ந்து உவந்தேன்   அன்று 
ஆம், அன்றுதான் அந்த அதிசயம் அரங்கேற்றம்
இணையம் எனும் பெரும் கடலில் 
நான் விரித்த அலசல் வலையில் வாய்த்தது
"FTC" எனும் விலைமதிப்பற்ற முத்து 
முத்தாய் கிடைத்த முத்தான மன்றத்தில்தான் 
எத்துனை எத்துனை இன்ப சொத்துக்கள் 
அவ்வின்ப சொத்துக்களில் ஏதோ 
என் சார்பாகவும் இது போன்ற 
ஒரு சில ஓட்டை காலணாக்கள் !