பால்வாடி பாடம் ,பாலபாடம்,பள்ளி பாடம் முட்டும்
மட்டுமே படித்து வந்த பட்டு தென்றல்கள் 
பட்டய படிப்பிலும் , பட்ட படிப்பிலும், பற்பல படிப்பிலும் 
பட்டையை கிளப்பி வரும் காலம் இது பாப்பா !.....
பெண்ணியம் பேசுகிறேன் பேர்வழி என்று போலியாய் 
கேலிகூத்து கதைபேசுபவரை கோலி அடி தோழியே !
துறை பல கண்டும்,கால்பதித்தும்,வெற்றி கொண்டும் 
அத்துறைகள் துரைகளின்  கோட்டை எனும் கொக்கரிப்பை 
துகள் துகளாக்கி  தகர்த்தெறி கண்ணே !
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு ??
என்றதும் ஒரு காலம் உண்டு 
அவை அனைத்தும்  ஒரு காலம், கடந்த காலம் 
காலபோக்கில் கடந்து வராமல், நொண்டி அடிக்கும் 
சில நொண்டிகளின் நொந்தல் வரிகளை 
நோகாமல் நலுங்காமல்  கந்தல் ஆக்கிவிடு கண்மணியே !
முந்தைய,காலத்தில் தான் முடக்கி  வைக்கப்பட்டு இருந்தீர் !
அக்காலத்தில்,பெண்கள் பெண்களாய் பணிவாய் பண்பாய்
பொறுமையில் பூமிக்கு ஒப்பீடாய் ஒப்பிடபட்டே 
அமுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வந்தீர் ....
இன்றோ, உங்கள் வளர்ச்சியோடு  ஒப்பிடபட்டால் 
அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பும் ,
தங்க விலை விலையேற்றம் கூட வீழ்ச்சி அடையும் 
அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி ....
படிக்கின்ற போது படிப்பும் , 
படைப்பை, படைக்கும் போது படைப்பும் 
ஓய்வின் போது ஓய்வும் , விளையாட்டின் போது 
விளையாட்டு ,என பகுதி பகுதியாய் பகுத்து,வகுத்து 
வாழ்வதால், பகுத்தறிவில் நீ பாதி பெரியார் !
தன் தனிவாழ்விலும் சிறந்து, போது வாழ்விலும் கலந்து 
தளர்வில்லா   மன உறுதியோடு  காய் நகர்த்தி 
காரியம் சாதிப்பதால் நீ பாதி கலைஞர் !
எது  எப்படியோ ? 
(சில) முதுகெலும்பில்லா ஆண்கள்  சமூகம்  இருக்கும் வரை 
உங்கள்      வளர்ச்சியினை, மனிதன் மட்டும் அல்ல 
இருப்பதாய் கருதப்படும் அந்த ஆண்டவன் வந்தாலும்
தடுக்க முடியாது !
வாழ்க பெண்ணீயம் ! வளர்க பெண்ணியம் !