Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 024  (Read 3100 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 024


இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Ameer  ல் வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


« Last Edit: October 11, 2018, 07:20:45 PM by MysteRy »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

பார்வைக்கு பதில் பார்வை என பார்வை பரிமாற்றங்கள்
இல்லா  காதல்,பொத்தல் காதல்.

சீண்டலில்  துவங்கி ,தீண்டலில் கலந்து ,எல்லை தாண்டல் பரிமாற்றங்கள்
இல்லா காதல் ,செல்லாத காதல்

மோகங்கள் தூண்டிட ,தேகங்கள் தீண்டிட,போக பரிமாற்றங்கள்
இல்லா காதல், சொதப்பல் காதல்

உள்ளங்கைகளுக்கு இணையாய் இதழ்களும் இணைந்தது  ரேகை பரிமாற்றங்கள்
இல்லா காதல் ,இளப்ப காதல்

மேற்கூறிய தகுதிகளை அடிப்படையாக கொண்டு
மேன்மை காதலை மேலும்  மேன்மைபடுத்திட
மேய்ந்தே அலைந்திடும் கூட்டம் உண்டு .

அவ்வடிப்படை தகுதிகளின் அடி படி தகுதியின் பகுதியை அன்றி
விகுதியை கூட தொட்டிராத காதல் உன் காதல் .

என்பதனால்  தானோ உன்  காதலை  தன்  காலடியில்  இட்டு

மிதித்திட  துடிக்கின்றது  மதி கெட்ட  கூட்டம்  ஒன்று  ....??????

இருந்தும் புனிதத்தின் எள்ளளவும் குறைவில்லா காதலே உன் காதல்

ஏசுபிரானை மதிப்போர்க்கு திருவிவிலியம் எவ்வளவோ ?
கண்ணபிரானை மதிபோர்க்கு கீதை எவ்வளவோ ?
கண்ணதாசனை மதிப்போர்க்கு  பாடல் எவ்வளவோ ?
ஆத்திகத்தை மதிப்போர்க்கு ஆன்மீகம் எவ்வளவோ ?
நாத்திகத்தை மதிப்போர்க்கு பகுத்தறிவு எவ்வளவோ ?
அளவின் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட, அளவிற்கெல்லாம்
அப்பாற்ப்பட்ட அளவு எவ்வளவோ ?
அவ்வளவு புனிதமானது புனிதமானவளே
உன் காதல் !


Offline supernatural

அன்புள்ள   என்    இதயமே   !
உன்னை  மனதென்னும்  மாளிகையில் ...
பத்திரமாய்  தான்  வைத்திருந்தேன் ...
கள்வனாய்  வந்து  நுழைந்தால் ....
களவாடிட  முடியாதே  என..
கண்ணாளனாய்  வந்து  களவாடிவிட்டான் ...
என்  கண்ணுக்கு  கண்ணான  இதயத்தை ...

களவாடப்பட்ட   கன  காலமாய் ...
களவாடபட்டதன்  தகவலும்  அறிந்திடவில்லை...
தடயமும்  தெரிந்திடவில்லை ...
கள்வன்  அவன்  கொடும்  கால்களின்  அடியில்  மிதிபட்ட  பின்புதான் ....
பேதையாய்  நான்  அவன்  காதலின் ...
போதையில்  மயங்கி  இருந்ததில் ....
தயங்கிடாமல்  நடந்தேறிய ....
கொள்ளை  களவு  இது என ....
தெள்ள  தெளிவானது ......

ஈடு  இணையில்லா  என்  காதலுக்கு ....
மாசில்லா  என்  அன்பிற்கு ...
மனதட்ட்ற  ..மதிகெட்ட   மிருகத்தின் ....
கடும்  பரிசு ....- நசுக்கப்பட்ட  காதல் ....!!!!!...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline SuBa

அவள் அழகின் ரகசியம் இப்போது தான் தெரிகிறது
எத்தனை முறை குளித்தாலோ
என்னை போன்ற ஆணின் கண்ணீரில்..
உன்னை அழகானவள் என்று கூறியதற்காக,
என்னை அழவைத்து பார்க்கிறாய்..
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலையை
உன் நினைவுகளில் இருந்து
என்னை விடுவித்து விடு..
நிரந்தரமாய் நீக்கிவிடு உன் நினைவுகளை
நிம்மதியாய் இருக்க முடியவில்லை..
என் காதலுக்கு மரணம் இல்லை
ஆனால் அதற்க்கு இன்று மரண அஞ்சலி..
காதலித்த பொது கைவிட்டு சென்றவளே
கால் தவறி கூட 
என் கல்லறை பக்கம் வந்தது விடாதே
என் கல்லறை பூக்கள் கூட கண்ணீர் சிந்தும்...!
« Last Edit: May 23, 2012, 10:25:09 PM by suba »
commercial photography locations

கார்க்கி

  • Guest
அதுதானா இது?

உன்னை இரண்டாமுறை பெற்றெடுக்கும்
அது என்றான் அவன்
உயிரோடு  உன்னை சாவடிக்கும்
அது  என்றான் இவன்
.
வாழவைக்கும் விஷம்
அது  என்றான் அவன்
சாகடிக்கும் மருந்து
அது என்றான் இவன்
.
எதை வேண்டுமானாலும் புசி,
இதைத் தவிர என்றுகேட்டதை
ருசி  பார்க்க தவித்த
அதாம் ஏவாளின் மனம் போல்
காதலை அறிய தவித்தது என் மனம்…
.
நம்மை யாரோ கடற்கரையில் பார்த்துவிட்டார்கள்
எனக்கு  கல்யாணம் தயாராகிறது
என்று பயந்து கொண்டிருந்தது ஒரு காதல்
.
“இதுசரியாய் வராது, நாம் பிரிந்துவிடுவோம்”
என்று  ஒரு இருதயத்தை அங்கே
நொறுக்கியது ஒரு காதல்…
.
நண்பனாகத்தான்  உன்னை பார்த்தேன்
என்று இருதயத்தை பிளந்து கொண்டிருந்தது
இன்னொரு காதல்…
.
நேற்று உன் பைக்கில் யாரவளென்று தொடங்கி
எக்கேடும்கெட்டோழி என்று முடியும்
கோபத் தீயில் கருகிக் கொண்டிருந்தது ஒருக் காதல்
.
சாதி பணம் அந்தஸ்து
என்ற பாகுபாடுகளின் காலில்
நசுங்கிக்கொண்டிருந்தது ஒரு காதல்…
.
தன் வயதுக் குழந்தையை தோளில்போட்டு
மீசைவைத்த  அன்னை அவன் தாலாட்டும்
இங்கொரு காதல்…
.
இதழ் வழி இருதயம் கொடுத்து
இருதயம் வாங்கிக் கொண்டிருந்தது
இங்கொரு காதல்…
.
கண்களின் வாய் வழி
கண் எனும் போதை மருந்தை
அள்ளி தின்றே உலக மறந்துகொண்டிருந்தது
அங்கொரு காதல்…
.
கை இதழால் இவன் பேச
பூ மேனி சிலிர்த்தது
இன்னுமொரு காதல்…
.
கண்காளால் அவன் பேச
வெட்கத்தால்  இவள் விடைகொடுக்க
புது  மொழியின் இலக்கணம்
அரங்கேற்றியது  இன்னுமொரு காதல்…
.
தீண்டல்களில் ஆரம்பித்து
படுக்கை வரை இனித்து
இருவரையும் சர்க்கரை நோயாளியாக்கி
கசந்து போனது ஆசை தீர்ந்த காதல்…
.
அவள் தின்று போட்ட மிட்டாய் தாள் தொடங்கி
உதிர்ந்த தலை முடி வரை
பொறுக்கித் திரிந்தது இங்கொரு காதல்…
.
குட்டி ஆரஞ்சு இதழ் வெட்டித் தள்ளுது,
முகத்திலாடும் முடி என்னை தூக்கிழுடுது
என்று புலம்பிப் போகுது கவிதுவக் காதல்…
.
இன்று  நானும் அவளும் ஒரே நிறஉடை,
என்னை இன்று அவள் கண் கடந்தது
என்று தூரத்திலிருந்தே ரசிக்கும்
சொல்லத் தைரியமில்லாக் காதல்…
.
இருதயத்தில் பூட்ட முடியாதது
இன்று தாடிக்குள் புதைந்து கிடக்கும்,
கண்களில் வாழ்ந்த கனவு
கண்ணீராய் வடியும், குறையாது
சுகமென்று  நினைத்து தெரிந்தது
வழியாய் மாறிப் போனது
விடை என்று நினைத்துக்கொண்டது
புதிராகி  குழப்பிபோகும்…
ஒரு  தலைக் காதல்…
.
இப்படி ஆயிரம் பார்த்தேன்…
இவ்வளவு காதல்  காட்டிய இந்த உலகுக்கு
உண்மைக் காதல் காட்டிட ஆசைப்பட்டேன்…
மன்மதனின் மலர் கணைக்கு
அடிபணியக் காத்துக்கிடந்தேன்…

Offline Global Angel


உன்னை சுற்றியே
என் உலகம் சுழல்கின்றது
உன்னை பற்றியே
என் நினைவு அலைகிறது
உன்னை தேடியே
என் உணர்வு கலைகிறது


உனக்காக என் பொழுது புலர்கிறது
உனக்கான என் ஏக்கங்களில்
என் பொழுது கரைகிறது ..
என் தலையனையை கேட்டு பார்
உனக்காக நான் ஏங்கி தவித்த
தனிமையின்  கொடுமைகளை
தாராளமாய் சொல்லும் ....

என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..


உன்னால் புறக்கணிக்க பட்டபோதும்
உன்னை தேடியே என்
இதயத்தின் பயணம் தொடர்கிறது ..
பலதடவை உன்னால் மிதிபட்டபோதும்
மறுபடியும் உன் பாதத்தை தேடி
என் இதயம் வருவது
உன்னை நேசிக்க அல்ல
உன்னை ஸ்பரிசிக்க..
« Last Edit: May 25, 2012, 12:19:25 AM by Global Angel »
                    

Offline thamilan

மாதராய் பிறந்திடவே
மாதவம் செய்திட வேண்டுமம்மா
என பாடினான்
மகாகவி பாரதி

பெண்ணாகப் பிறப்பதே
இந்தப் பூமியில்
ஒரு சாபக்கேடாகி மாறிவிட்ட‌
ஒரு நிலை

ஆண் எனும்
ஆதிக்க வர்க்கத்தை படைக்காமல்
பெண் எனும்
அடங்கிப் போகும்
வர்க்கத்தை மட்டும் படைத்திருந்தால்
பாரதி கூற்று மெய்யாகி இருக்கும்

ஆனால்
பிறந்தது முதல் இறக்கும் வரை
ஆணின் கீழ்
அடங்கி நடப்பதே
வாழ்க்கை என பெண்களின்
தலையில் எழுதி இருக்கிறதே

மலர்கள் கூட‌
சுதந்திரமாய் மலர்ந்து
சுதந்திரமாய் மணம் வீசுகின்றன‌‍‍ ‍‍‍‍
ஆனால் ம‌ல‌ருக்கு ஒப்பான‌ பெண்க‌ள்?
ஒவ்வொரு ப‌ருவ‌த்திலும்
ஆண்க‌ள் த‌டைக‌ற்க‌ளாக‌
த‌டுப்புச் சுவ‌ர்க‌ளாக‌
பெண்க‌ள் முன் நிற்கின்ற‌ன‌ர்

இய‌ற்கை கூட‌ பெண்ணுக்கு
முர‌னாக‌வே செய‌ல்ப‌டுகிற‌து
துள்ளித்திரியும் வ‌ய‌தில்
ப‌ருவ‌ம் எனும் முத்திரை குத்தி
வீட்டுக்குள் முட‌க்கி வைக்கிற‌து

ப‌ருவ‌ வ‌ய‌தில்
காத‌லும் வ‌ரும் அது
இய‌ற்கையின் நிய‌தி
சாதி, ம‌த‌ம்
ப‌ண‌ம் தொழில் என‌
போலிக் கெள‌ர‌வ‌ங்க‌ளால்
எத்த‌னை காத‌ல் இத‌ய‌ங்க‌ள்
பெற்றோரின் கால‌டியில்
ந‌சுங்கி மாண்டிருக்கின்ற‌ன‌

க‌ல்யாண‌ம் முடிந்து போனாலோ
க‌ண‌வ‌ன் மாம‌ன் மாமி
நாத்த‌னார் கொழுந்த‌னார்
இவ‌ர்க‌ள் விருப்ப‌ம் போல‌
வாழ்வ‌தே வாழ்க்கையாகி விடுகிற‌தே
அவ‌ள் ஆசைக்க‌ன‌வுக‌ள்
திரும‌ண‌ம் எனும் ஒரு ப‌ந்த‌த்தின்
கால‌டியில் ந‌சுங்கிப் போகிற‌தே

க‌ண‌வ‌னுக்கோ
ப‌க‌லில் ம‌னைவி ஒரு வேலைக்காரி
இர‌வில்  ஒரு விப‌ச்சாரி
தேவைப்ப‌டும் போதில்லாம்
ப‌ண‌ம் காய்க்கும் ஒரு
க‌ற்ப‌க‌ சிருட்ச‌ம்

எத்த‌னை பெண்க‌ளின்
இத‌ய‌க் க‌ன‌வுக‌ள்
க‌ண‌வ‌னின் கால‌டியில்
புகைத்துப் போட்ட‌ பின்
கால்க‌ளால் ந‌சுக்க‌ப்ப‌டும்
சிக‌ர‌ட் துண்டுக‌காக‌
ந‌சுங்கிப் போகிற‌தே

பெண்ணாய் பிற‌ந்திட‌
மாத‌வ‌ம் செய்திட‌வும் வேண்டுமா
பார‌தியே ம‌றுப‌டி வ‌ந்திங்கு பிற‌ந்திடு
உன் க‌விதையை
மாற்றி எழுதிடு