உன்னோடு பேசாத பொழுதுகளில் 
எத்தனை வேலை பளுவில் இருந்தாலும் 
என் மனம் என்னவோ தனிமை தீவினில் .....
தனிமையிலே இனிமை காண முடியுமா??
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
பாடலாசிரியர் கே .டி.சந்தானம் 
ஆசிரியர், காதல் வயபட்டிருக்கமாட்டார் போலும் ??
நினைவில் உன்னை போல நீங்காத நினைவுகளின் 
சொந்தக்காரி இருந்திடும் பொழுது 
தனிமைகளுக்காக தவம் இருக்கலாம் எனும் 
உணர்வுப்பூர்வ  உண்மையை உணரவும் இல்லை  போலும் ??
 
என்னத்தை தான் பேசுகின்றோம் மணிக்கணக்கில் ?
உள் மனசாட்சியின் கேள்வி இது ...
மனதை ஆட்சி புரியும் அவளோடு மனம் கலந்து 
எங்கள் எண்ணத்தை பேசுகின்றோம் என 
 நான்அளித்த பதிலை கேட்டு ,மனசாட்சியும் 
மனசாட்சியின் மனசாட்சியும் மௌனம் ஆகிவிட்டது 
உன் நினைவுகளுக்கு தான் எத்தனை வீரியமடி .....