கத்திரிக்காய் ரசவாங்கி
செய்பொருள்:
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி வெரை( தனியா) - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - மூன்று
புளி தண்ணீர் - 3 கிண்ணம்
நறுக்கிய கத்திரிக்காய் - 2 கிண்ணம்
தக்காளி - ரெண்டு ( பொடியாக நறுக்கவும்)
சாம்பார் பொடி- ரெண்டு தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
உளுத்தம் பருப்பு, கடுகு - தாளிக்க
பெருங்காயம் சிறிதளவு
1/4 கிண்ணம் வேக வைத்த துவரம் பருப்பு
மல்லிதழை - சிறிதளவு
அரைக்க வேண்டியது :
தனியா , மிளகாய் வற்றல் , தேங்காய் துருவல் மூன்றையும் நன்றாக மைய்ய
அரைத்துகொள்ளவும் .
செய்முறை:
ஒரு கனமான வானெலியில் புளி தண்ணீரில் நறுக்கிய கத்திரிக்காயை வேகவிடவும்,
மற்றொரு வானெலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி கடுகு , ஊ. பருப்பு தாளித்து மஞ்சள் பொடி , சாம்பார் பொடி, தக்காளி, தேவைக்கேற்ப உப்பு , ஆகியவற்றை வறுத்து அதோடு வெந்த கத்திரி காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், பின்பு அரிது வைத்ததை சேர்த்து நன்கு கொதித்ததும் மல்லி தழை தூவி இறக்கவும்.
குறிப்பு:
சாதம்,தோசை, இட்லி என எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்