« Reply #5 on: August 25, 2015, 10:22:12 AM »
மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்
தேவையானவை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், கொண்டைக்கடலை - கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், கெட்டித் தயிர் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை:
அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு:
வெங்காய ஊத்தப்பம் வேண்டுமெனில், நறுக்கிய வெங்காயத்தை ஊத்தப்பத்தின் மீது தூவி மிதமான தீயில் பொன்னிறமாக சுடவும்.
« Last Edit: August 25, 2015, 12:07:30 PM by MysteRy »

Logged