Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 047  (Read 3072 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 047

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Sham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


« Last Edit: October 11, 2018, 07:58:40 PM by MysteRy »
                    

Offline shaM

அன்று  கொட்டும்  மழைதனிலும்
சுட்டெரிக்கும்  வெயில்தனிலும்
உனக்காய்  குடை பிடித்து
காதல்   கதை  பேசிய   காலங்கள்
நொடிப்  பொழுதில்    மறைந்துவிட்டன
நீயும்  என்னைவிட்டு  வெகு  தூரமாய்  பரந்துவிட்டா ய்

காணமல் போன  இதயமும்
கண்ணீர்  தேங்கிய  கண்களும்
தலை  தூக்கி  பார்க்கமுடியாமல்
உடல்  முழுவதும்  காதல் கரையுடன்
மாற்றார்க்கு  முகம் காட்டமுடியாமல்
யாருமே   இல்லாத  நடு  வானில்  மேகங்கள்   படைசூழ
நீ  என  நினைத்து  உண்மாயைக்கு  குடைபிடி த்து
குடையுடன்   காதல்   கதைய் பேசும்
காதல்  பித்துதலைகேறிய  காதல்கிறுக்கனாய்
உன்  வருகைக்காய்  உனக்காய்   ஏந்திய கைகளும்
விரித்த குடையுடனும் ஆஹாய முற்றதில்
உன்  வருகையை  எதிர்பார்த்து  காத்திருக்கும்
குடையுடன்  ஒரு தேவதாஸாய்     உன்னால்  நான் இன்று .........
« Last Edit: November 04, 2012, 12:37:31 PM by shaM »

Offline RDX

நீ வாருவாய் என  குடை பிடித்தி நிற்கையில் நீ
நீ வரமால் போவதும். நீ  வர மாட்டாய் என
எண்ணும் தருணத்தில்  வந்து என்னை நனைப்பதும்
வேடிக்கை வினோதம் தான்

ஒ  வானமே பல தருணம் கெஞ்சியும் ஒரு துளியை
கூட மண்ணில் விழுத்த எண்ணும் உன் கண்களுக்கு
மட்டும் நாம் காத்திருப்பதும் கெஞ்சுவதும் வேடிக்கை

பல சிறு துளியாக மண்ணில் விழுந்தாலும் மண்ணில்
விழுந்த கணத்திலேயே ஒன்று சேர்ந்து கரைபுரண்டு
ஓடும் மழையின் துளியே  நீயும்  இயற்கையின் அதிசயம்தான் 

Offline தமிழன்

பூமிக்கு வானமே குடை
அந்த வானுக்கு
குடை பிடிக்கும் கொ(கு)டைவள்ளல்
யாரோ இவன்

வானில் ஓசான் படலத்தில்
ஓட்டையென அதனால் தான்
சுட்டெரிக்கும் வெயில் என
சொன்னதைக் கேட்டு
ஓசான் படலம் ஒழுகாமல்
குடை பிடிக்கிறானோ இவன்

பூமியில் தண்ணீரின்றி
காய்ந்திருக்கும் நதிகள்
தவளைக்கு கூட
தண்ணீரில்லாத குளங்கள்
காத்திருந்து காத்திருந்து
காய்ந்து போனத‌னால்
மேகமதிலேறி தண்ணீரை தேடிகின்றானோ இவ‌ன்

உல‌க‌மே ப‌டைப்பின் நிய‌தியை தாண்டி
த‌லைகீழாக‌ சுழ‌ல்வ‌து க‌ண்டு
இறைவ‌ன் இருக்கிறானா என‌ ஐய‌ம் கொண்டு
வான‌ம‌தில் இறைவ‌னை தேடித்திரிகிறானோ இவ‌ன்


த‌ன் வானில் ஒரே நில‌வு
த‌ன் காத‌லி
அவ‌ள் தான் என்றிருந்த‌
திடீரென‌ காணாம‌ல் போன‌
த‌ன் காத‌லியை
வான‌மெங்கும் தேடிய‌லைகிறானோ இவ‌ன்

புரிய‌வில்லை என‌க்கு
புரிந்தால் சொல்லுங்க‌ள் என‌க்கு
« Last Edit: November 16, 2012, 03:27:10 PM by thamilan_sl »

Offline Global Angel

ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய்  உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம்  செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
வான் மேகங்கள் சூழ்ந்து
வெள்ளி மழை பொழியும்  நேரம்
வளியோரமாய் உன்னினவுகளை
சுமந்து தனிமையில் செல்லுகையில்
என் நிழல்களாக  நீயும் வருவது போல
உணர்கின்றேன் நானடி ...
முத்து முத்து மழை துளிகள்
வெள்ளி காசு போல
வானில் இருந்து நமை நோக்கி வர
என் நிழல்க்கு குடை பிடிக்கிறேன்
நான் நனைந்தாலும் என் நிழல்கள்
நீ நனையாமல் இருக்க ....
நிழல்களாய் என்னை பின்தொடர்ந்தலும்
நீ பேசும் அன்புவார்த்தைகள்கு பஞ்சம் இல்லை
வெள்ளி மழையில் நனையும் நான்
உன் அன்பு மழையுளும் சேர்ந்து
நனைகிறேன் நானடி !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..