Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 049  (Read 2939 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 049

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Kanmani அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



« Last Edit: October 11, 2018, 08:03:02 PM by MysteRy »
                    

Offline தமிழன்

காலம் எனும் நீண்ட பாதையில்
காலடி வைத்திருக்கும் நாம் மழலைகள்
எம் நாளில் இது வசந்தகாலம்
இளங்காற்று வீசும் இளவேனில் பருவம்
கவலைகள் எமக்கில்லை
கனவுகள் காண்பதும் இல்லை

நானும் நீயும் த‌னிமையில்
ம‌ல‌ர்க‌ளோடு ம‌ல‌ர்களாக‌ ந‌ந்த‌வ‌ன‌த்தில்
நம் ம‌ன‌திலும் க‌ள்ள‌ம் இல்லை
பார்ப்ப‌வ‌ர் க‌ண்க‌ளிலும் க‌ள‌ங்க‌மில்லை

இந்த‌ நாள் நாம் வ‌ள‌‌ர்ந்து
வாலிப‌ம் வ‌ந்த‌ பின் வ‌ராது
அப்போது நாம்
ம‌ன‌தில் க‌ள‌ங்க‌ம் இல்லாம‌ல்
காத‌ல‌ர்க‌ள‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளாக‌
இதே ந‌ந்த‌வ‌ன‌த்தில்
இதே த‌னிமையில் இருந்தால்

ஆயிர‌ம் க‌ண்க‌ள்
ச‌ந்தேக‌க்க‌ண் கொண்டு பார்க்குமே
பார்ப்ப‌வ‌ர் ம‌ன‌தில்
காத‌ல‌ர்க‌ளா இவ‌ர்க‌ள் என‌
ச‌ந்தேக‌ம் த‌லைதூக்குமே
எதையும் மாறுக‌ண் கொண்டு பார்க்கும்
உல‌க‌ம‌ல்ல‌வா இது.

போனால் வ‌ராது
உயிரும் ம‌ழ‌லைப்ப‌ருவ‌மும்
வ‌ள‌ர்ந்த‌ பின்
நம் ம‌ன‌தும்
சாத்தான் ச‌ன்னிதியாக‌ மாறிவிடும்

ந‌ம் ந‌ட்பு கூட
என்னாகுமோ ஏதாகுமோ
வா ந‌ண்பியே
நாமும் ம‌ல‌ர்க‌ளோடு ம‌ல‌ர்க‌ளாக‌
ப‌ட‌ப‌ட‌க்கும் ப‌ட்டாம்பூச்சிக‌ளாக‌
சிற‌க‌டித்துப் ப‌ற‌க்க‌லாம்
இப்ப‌ருவ‌த்தை இனிதே கழித்திட‌லாம்
 

« Last Edit: November 25, 2012, 12:13:17 PM by thamilan_sl »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
என் ரத்தத்தில் வந்த உடன் பிறப்பே !.
என் வீடுக்கே செல்ல பிள்ளை நீ
உன் சின்ன மழலை சிரிப்பில்
இறைவனை காணலாம் ..

தினமும் துளியால் எல காரணம் நீதானே
உன் பசி அழுகையால் தினமும் எழுப்புவாய்
உன் பசி தீர்ந்ததும் உன் விளையாடு
பொம்மைகளால் என்மீது எரிந்து
ரசித்து மகிழ்வாய் ....

உன் சின்ன சின்ன குறும்பு தனத்தை
கண்டு ரசித்த படியே உன்னை தூக்கி
செல்ல முத்தம் கொடுத்து கொஞ்சும்போது
உன் மழலை குரலால் நன்றிகள் சொல்லிடுவாய் ...

பள்ளிக்கு நான் செல்லும் போதும்
வாசலில் நின்று டாட்டா கட்டி வளிஅனுப்புவாய்
பள்ளி முடிந்து வரும் வரை அமைதியாய்
உறங்கி கொண்டு இருப்பாய்...

தூரத்தில் என் குரல் கேட்டதும் ஓடிவந்து
என்கால்களை கட்டிக்கொண்டு
உன் மழலை சிரிப்பில் சந்தோசம் கொள்ளுவாய்
தினம் தோறும் ....

மாலை வேலையில் அருகில் இருக்கும்
பூங்காவிற்கு அழைத்து போக அங்கு
உன்னை மறந்து நீ காணும் சந்தோஷத்தில்
என் நினைவுகள் என் சிறுவயதை நாபகம் செய்யும் ...

என்  பரிச்சை நேரத்தில் படிக்கும் போது
அமைதியாய் இருந்து உற்று கவனிப்பாய்
காலை எழுந்து படிக்கும் நீயும் எழுந்து
என் அருகில் அமர்ந்து உன் நித்திரை துளைபாய் ...

பரிச்சைக்கு செல்லும் போதும் பலமுறை
வாழ்த்து சொல்லி கடவுளிடம் வணங்கி
திருநூரை என் நெட்ரில் பூசி வளி அனுப்பிவைத்து
அன்று முழுவதும் விரதம் இருப்பாய் ...
உன்னை போல ஒரு தங்கை கிடைத்தற்கு
நம் கடவுளான தாய் தந்தைக்கு நன்றிகள்
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline MysteRy

வண்ண வண்ணமாய்
வனப்புக்களும்
வானமே வசப்பட்டு
நேசம் கொள்ளும்
கண்ணுக்கு கவின்
குளிர்ச்சியுடன்
மனதிற்க்கு மட்டற்ற 
மகிழ்ச்சியையும்
தன்  வாசத்தால் ஒளிபரப்பி
வாரி வழங்கும்
நறும் வாச மலர்கள் நிறைந்த
அழகு பூஞ்சோலைக்கு
மத்தியில்
உலகின்
ஒட்டுமொத்த பாசத்தையும்
பாசாங்கென்பது
பேச்சுக்கும் இல்லாமல்
பாசத்தோடு பேசி பேசி
பகிர்ந்திடும்
இப்பாச மலர்களை
பார்த்து பார்த்துதான்
பூக்களும் கூட
புன்னைகைக்கின்றதோ ??

விவரம் அறிந்தவர்
விவரியுங்களேன்  !!
« Last Edit: November 28, 2012, 04:42:32 PM by MysteRy »

Offline RDX

நானும் தனையன்

உன்  பிறப்பிற்காக காத்து கிடந்தேனோ
தெரியவில்லை உன் பூமிக்கான இவ்
வருகை என் வாழ்வில் விருட்சத்தை

கொடுத்தது .தங்கை இல்லை நான்
தனையன் இல்லை என்ற என் எண்ணத்தை
கலைத்து என்மனதில்  சுகந்தத்தை அள்ளி

வழங்கியது உன் வருகை. நானும் என்
தங்கையாய்  குழந்தை உன்னை  அள்ளி
அணைத்தேன்...

உதிரத்திலும் பிறப்பிலும் நாம் வேறு ஆனா
போதும்  உன் மனசிலும் என் மனசிலும்

அண்ணன் தங்கை என்ற உணர்வோடு நாம்
ஒரு தாய் குழந்தையாய் ஆனோம். உன்

தனையன்களை விடவும் இந்த வேற்று தாய்
தனையனுக்கு கொடுக்கும் உரிமைக்காய்
என்றும் கடமை பட்டவானாய் காத்து கிடக்கின்றேன்.


பாசத்தில் என் தாயாகவும்  என்  துன்பத்தில்
அன்புள்ள தங்கையாகவும் உன்னை காண்கிறேன்.

எனக்கு ஒன்று என்றவுடனே  துடிக்கும் உங்கள்
இதயங்களை தொலைதுரத்தில் விடுத்து தவிக்கின்றேன்
ஆனாலும் உங்கள் உங்கள் நினைவுகள் மட்டும்

கண்ணில் வற்றாத கண்ணீரை  கொடுக்கின்றது.
என்றும் உங்கள் அண்ணனாய் உடன்பிறவாத
தனையன் RDX

Offline Global Angel

அன்றும் பார்
இது போல் தான்
என்றும் வைதுகொண்டே இருந்தாய்
நானும் இன்றுபோல் தான்
அன்றும் கேட்டுகிட்டே இருந்திருக்கிறேன்
அன்று உன்னை
அசிங்கமாய் திட்டி இருக்க வேண்டுமோ ...
இன்று அதிகமாய் சிந்திக்கிறேன் ...

அன்பாய் நாலுவார்த்தை பேசுகின்றாய்
அடுத்து வரும் ஆறு வார்த்தையும்
அறுத்து தள்ளுகின்றாய்
அன்பே என்றேன்
அடங்கா பிடாரி  என்கிறாய்
அன்றே உன் அலட்டலுக்கு
அறுதியாய் முடிவு கட்டாமல்
அமைதியாய் கேட்டது
ஐயோ என் தப்புதான் ...

உன்னோடு இருக்கும்
ஒரு நிமிடத்துக்காக 
என் உணர்வுகள் அனைத்தையும்
உனக்காய் கொடுத்தேன்
மண்ணோடு போகும்வரை
அதன் மரண வேதனைகளை
அறிவாயோ இல்லையோ
உனக்கு மட்டும்
என் உணர்வுகள் புரிவதில்லை ஏன் ..'

உனக்கு நான் சொந்தமானவள் இல்லை
உன் உணர்வுகளுகாவது சொந்தமாய் இருப்பேனோ
என்றும் நினைவு கொள்
உன்னை உனக்காக நேசித்தவள்
உன்னை உனக்காக கொடுத்தவள்
அன்றும் இன்றும் என்றும்
உன்னை நேசிக்கும்
உரிமைகளற்ற ஓர் இதயம் ..
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 116
  • Total likes: 116
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் தோழன் மாஸ்டர்காக மட்டும்

இணையத்தில் இணைந்த இனியவனே..

நட்புக்குள் பொய் இல்லை...
பொய் இருந்தால்.
அது நட்பே...இல்லை....
நட்பை தந்து நட்பினை
உணர்த்தியவன் நீ ..

வேஷமிகு உலகில்
உள்ளம் தொடும் பாசத்தை
பரிவோடு தந்தவன் நீ...

தனிமையை நேசித்தேன்
கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய்
தனிமை மறந்தேன்...

பாசத்தை காட்டினாய்
பரிவாய் பேசினாய்
குறும்பாய் சிரித்தாய்
தேடலை உணர்த்தினாய்
தூக்கத்தை மறந்தேன்
அளவில்லா சந்தோசத்தை
உன் அன்பால் உணர்ந்தேன்

மாறும் உலகில் மாறாத
உறவாய் இருப்பவனே
தோல்வியில் மரித்தேன்
நட்பு தந்து உயிர் தந்தாய்

விட்டு கொடுத்து போவதுதான்
நட்பின் இலக்கணமாம்
உன்னை விட்டு இலக்கணம்
படிக்க விரும்பவில்லை..

உனக்கான உறவுகள் ஆயிரமிருபினும்
எனக்கான உறவாய்
என்னுயிர் தோழனாய்
என்றென்றும்  நீ மட்டும் போதும்....
நட்பெனும் சொல் அழிந்தே போயினும்
நம் நட்பு அழியாது
நான் அழியும் வரை... ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

முதன் முதலில்
 என் பள்ளி வளாகத்தில்
வண்ண வண்ண பூக்கள் நடுவில்
ஒரு சிறு பூவாய்
கண்டேன்  அவளை . . .

பத்திரமா பார்த்துக்கோ தம்பி
பள்ளி வர பயப்படும்
குழந்தை அவள்
என்றவள் அன்னை அறிமுகம் செய்ய
மீண்டும் கண்டேன்
அழுது சிவந்த
அவள் முகத்தை . . .



துள்ளிய மீன்கள்
நீரை சிதரடித்ததை  போல்
அவள் முகம் எங்கும் ஈரம்
மீன் போன்ற கண்களின்
அழுகையால் . . .

அன்று முதல்
அவளை பத்திரமாக
பார்த்து  கொள்ள 
துவங்க . . .

வருடங்கள் உருள
நட்பு வளர்ந்தது
எங்களுடன் சேர்ந்து !!

பின்  பருவ வயதில்
நட்பா காதலா 
என்ற தடுமாற்றம் என்னுள் எழ . . .

தலை கால் புரியாமல் தள்ளாடியது
என் இதயம் ! !

அவளுக்காக மட்டுமே
இதயம்  துடிக்க. . .
தன் வேலையை மறந்து
உறங்கியது
என் மூளை !!

இப்படியே நாட்கள் பல கழிய
இதோ இன்று தான்
விழித்தது மூளை
12ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகளில் என் தோல்வியை
கண்டவுடன் ! !



 


இப்படிக்கு
பருவ வயதில் வரும்
ஈர்ப்பை காதல் என்று
நினைத்து
ஓவராய்  உணர்ச்சிவசப்படும்
சங்கம்
« Last Edit: November 29, 2012, 07:43:48 PM by Dong லீ »