Author Topic: ~ இந்த மூணுல நீங்க எந்த ரகம்??? தெரிஞ்சிக்க உடனே படியுங்க!!! ~  (Read 645 times)

Offline MysteRy

இந்த மூணுல நீங்க எந்த ரகம்??? தெரிஞ்சிக்க உடனே படியுங்க!!!



கைரேகை ஜோசியம், முகம் பார்த்து குறி சொல்வது, ஏடு, சுவடி, ஏன் கம்ப்யூட்டர் ஜோசியம் கூட நாம் கடந்து விட்டோம்.

நமது உடல் வாகு அடிப்படை கொண்டு கூட ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என கண்டறியலாம். அந்த வகையில் ஒருவரின் கை விரல்களின் நீளத்தை வைத்தும் கூட அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துக்கொள்ள முடியுமாம்.....

கவர்ந்திழுக்கும் தன்மை நீங்கள் மிகவும் எளிதாக அனைவருடமும் பேசி, பழகும் நபராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது விரைவாக ஈர்ப்பு கொள்வார்கள். உறுதியான, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சாமார்த்தியம் அதிகமாக இருக்கும்.

இளகிய மனம் நீங்கள், துன்பப்படும் மற்றவர் மீது அக்கறை எடுத்துக்கொள்வீர்கள், இளகிய மனமுடைய நபராக வாழ்வீர்கள். உங்களால் முடிந்த வரை உதவி, குறைந்தபட்சம் மற்றவருக்காக வருத்தம் கொள்ளும் மனோபாவமாவது இருக்கும்.

விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள் இவர்களது அறிவாற்றல் விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள் அளவிற்கு இருக்கும். பிரச்சனைகளுக்கு முடிவு கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

ரிஸ்க் எல்லாம், ரஸ்க் மாதிரி இவர்களுக்கு கடின வேலைகள் செய்வதென்றால் பிடிக்குமாம். கடினமான வேலைகளை முதிலில் முடித்துவிட துடிப்பார்கள். திடீரென முளைக்கும் பிரச்சனைகளை கூட கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தன்னம்பிக்கை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இவர்கள் இருப்பர்கள். இவர்கள் தங்களை, தாங்களே மிகவும் விரும்பும் நபர்களாக இருப்பார்கள்.

நேரத்தை வீணாக்க வெறுப்பார்கள் இவர்களை பொறுத்தவரை நேரம் எப்போதும் பொன் தான். நேரத்தை வீணடிக்க இவர்களுக்கு பிடிக்காது. நேரத்தை வீணடிக்கும் மனிதர்களையும் இவர்களுக்கு பிடிக்காது.

தலைமை குணம் எந்த வேலையையும் யோசிக்காமல் செய்ய மாட்டார்கள். அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி. வேலையாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மதிப்பை கொடுக்கும் குணம் உடையவர்கள்.

நல்ல மனம் இயல்பாகவே நல்ல மனம் படைத்தவராக இருப்பார்கள், அமைதியானவர் என்ற பெயர் பெற்றிருப்பர். சண்டை சச்சரவுகளை வெறுக்கும் நபர்களாக இருப்பார்கள். சண்டை ஏற்படும் சூழ்நிலையை கூட தவிர்த்துவிடுவார்கள்.

கூட்டுறவு அனைவருடனும் ஒத்துழைப்பு தந்து வாழும் நபராக இருப்பார்கள். இவர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளராக திகழ்வார்கள். நட்பு, காதல், வேலை போன்றவைக்கு நியாயமாக இருப்பார்கள்.

அடிக்கடி கோபம் குணம் இருக்குமிடத்தில் தான் கோபம் இருக்கும் என்பார்கள். இவர்களும் அப்படி தான். சிறு, சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி கோபம் ஏற்படும். சிறிய விஷயத்திற்கு பெரிய வாக்குவாதம் செய்வார்கள்.

வெறுக்க மாட்டார்கள் வாக்குவாதம் கோபம் ஒருபுறம் இருந்தாலும், மற்றவர்களை வெறுக்க மாட்டார்கள். ஆனால், ஒருவர் தனக்கு தேவையில்லை என தெரிந்தால், பொய்யாக நடித்துக்கொண்டு உடன் இருக்காமல், முற்றிலுமாக விலகிவிடும் குணம்
கொண்டிருப்பார்கள்.