Author Topic: நல்ல பாடல்கள் வரும் காலம் எப்போது...  (Read 835 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மனதில் ஏதோ ஒரு சோர்வு
எங்கோ மெலிதாக
இனிதான பாடல் ஒலிக்க
எந்த அலைவரிசையோ
தொலைகாட்சி பெட்டியிலோ
எங்கே அந்த பாடல்??
இசை அலைவரிசையில்
ஏதேதோ பல பாடல்கள்
ஒலிக்க எதுவுமே பிடிக்கவில்லை...

கதாநாயகன்
கண்ணாடி கட்டிடங்களுக்கு
முன்பு ஏனோதானோ ஆட்டம் போட
கலர் கலராய் உடை அணிந்த
வெள்ளை அழகிகள்
புரியாத பாஷையை
புரிந்தது போல
உதட்டசைக்க...

வார்த்தைக்கும், உணர்வுக்கும்
என்ன பொருத்தமே விளங்கவில்லை
வெளிநாட்டு மோகம்
பாடல் வரை வந்துவிட்டதே
கதாநாயகி அரைகுறையாய்
ஓடிவந்து வெள்ளை அழகிகளுடன்
ஆட்டம் போட..
உடை பற்றாக்குறையோ
நினைக்க தோன்றும் ஒரு கணம்....

ஆடம்பரம் என்ற பெயரில்
அலங்கோலம்...
வெளிநாட்டுத் தெருவிளக்கு
கம்பங்களை கட்டி அணைத்து ஆட
பல லட்சம் செலவோ...
கருப்பு வெள்ளைக்காலத்தில்
உடை, பூக்களின் நிறம்..
தெரியாதிருந்தபோதும்
கலை நுட்பத்தால்
உருவாக்கிய அரங்கத்துள்
ஆர்பாட்டம் இல்லாமல்
அழகாய் உருவாகிய பாடல்
இன்றுவரை அழியவில்லை...

தொழில் நுட்ப முன்னேற்றம்
தொழிலை வளர்க்காமல்
அழித்துக் கொண்டு இருக்கிறதே..
நல்ல பாடல்கள் வரும் காலம் எப்போது... :'(


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

காலத்துக்கு ஏற்ப மாறுவது இதுதான் போல நல்ல சிந்தனை கவிதை  :)
                    

Offline RemO

Quote
கதாநாயகி அரைகுறையாய்
ஓடிவந்து வெள்ளை அழகிகளுடன்
ஆட்டம் போட..
உடை பற்றாக்குறையோ
நினைக்க தோன்றும் ஒரு கணம்....

evlo kulira irunthaalum heroin matum dress kamiya than poduvanga
oru velai avangalikku kuliraatha :D