Author Topic: ~ ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது தென்னிந்திய உணவு வகையாகும். ~  (Read 330 times)

Offline MysteRy

ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது தென்னிந்திய உணவு வகையாகும்

இது மதுரைப் பகுதியிலிருந்து தோன்றிய குளிர்பானம் ஆகும். "ஜில் ஜில்" என்பது குளிர்ச்சியையும் "ஜிகர்தண்டா" என்பது குளிர்ந்த இதயம் என்றும் இந்தியில் பொருள்படும். மதுரைக் கடைத் தெருக்களில் புத்துணர்ச்சி பானமாக இன்றும் விற்கப்படுகிறது.



தேவையானப் பொருட்கள்

கடற்பாசி - 5 கிராம்
பால் - 5 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நன்னாரி சர்பத் - 1 கரண்டி
பனிக்கூழ் (icecream) - 1 கிண்ணம்
சவ்வரிசி - 1 சிறு கிண்ணம்

செய்முறை

பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.
நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.
ஒரு கண்ணாடிக் குவளையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.

குறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.