Author Topic: ~ தாய்ப்பால் வங்கி ~  (Read 343 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தாய்ப்பால் வங்கி ~
« on: August 13, 2015, 08:40:48 PM »
தாய்ப்பால் வங்கி



ஒரு தாய்க்கு அதிக தாய் பால் சுரந்தால் அதனை தானம் செய்வது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சேவையாகக் கருதப்படுகின்றது. நோய்களின் தாக்குதலும், தீவிரமும் அதிகமடைந்துள்ள இக்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஆகாரம் பின்னர் 2 வயது வரை மற்ற உணவுகளையும் சேர்த்து தாய்ப்பாலையும் அளிப்பது தகுந்த பாதுகாப்பாகவும் மிகவும் வலியுறுத்தப்படுகின்றது.

அநேக தாய்மார்களுக்கு தன் குழந்தைக்குத் தேவையான பாலை அவர்களாலேயே கொடுக்க முடிகின்றது. சிலருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே குழந்தைகள் பிறந்து விடுகின்றது. இவர்களுக்கு உடனடியாக குழந்தைக்கு தேவையான பால் கொடுக்க முடிவதில்லை. இது அவர்களுக்கு அதிக மன உளைச்சலையும், நோயினையும் தந்து விடுகின்றது. இவர்களுக்காக இன்று தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலில் வெளிநாடுகளில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கிகள் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வங்கிகளில் பணிபுரிவோர் தாய் பால் கொடுப்பவரின் வீட்டிற்கே சென்று அதனை சேகரித்து பதப்படுத்தி பிறந்த பிஞ்சு சிசுக்களுக்கு கொடுத்து காப்பாற்றுகின்றனர். இந்த அளவு தாய்ப்பாலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் குழந்தையின் வளர்ச்சி, நரம்பு மண்டல வளர்ச்சி, பூ போன்ற உணவுப் பாதை பாதுகாப்பு இவற்றிக்காகத்தான் இந்த வங்கிகள் அரும் சேவையை செய்து வருகின்றன. இதனை படிக்கும் இளம் தாய்மார்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தினை உணர வேண்டும்.

இப்படி ஒரு வசதி இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.வங்கிகளில் தாய்ப்பால் கொடுக்கக் கூடிய தாய்மார்கள் எங்கோ உள்ள ஒரு குழந்தைக்காக பாலை தானம் செய்ய வேண்டும். அதிக பாலை அளிப்பதால் அவர்களது குழந்தை பால் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. தாய்ப்பால் தானம் செய்தாலும் அது பல பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட பின்பே குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றது. பாலை கொடுப்பவரின் பெயரும், பெறும் குழந்தையினைப் பற்றியும் விவரங்களை வெளியிடுவதில்லை.