Author Topic: ~ சத்தான ஆலிவிதை இட்லி பொடி ~  (Read 510 times)

Offline MysteRy

சத்தான ஆலிவிதை இட்லி பொடி



தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - 1 கொத்து
கல் உப்பு - சுவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - அரை ஸ்பூன்

செய்முறை :

• அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். பின் அதில் உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

• உளுத்தம்பருப்பு சிவக்க வறுபட்டதும் அதில் ஆலிவிதையை போட்டு வறுக்கவும். ஆலிவிதை வெடிக்கும். எனவே வறுக்கும் போது மூடிவைத்து வறுக்கவும்.

• கடைசியாக பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்த பின் ஆறவைக்கவும்.

• ஆறியதும் மிக்சியில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, ஆலிவிதை, கறிவேப்பிலை போட்டு கொரகொரப்பாக அரைத்து கடைசியாக உப்பு, சீரகம் போட்டு ஒருசுற்று சுற்றி எடுக்கவும்.

• இந்த பொடியில் நல்லெண்ணை ஊற்றி இட்லி, தோசைக்கு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

• ஆலிவிதை உடலுக்கு மிகவும் நல்லது. ஆலிவிதையில் நல்ல கொழுப்பு அதிகளவு உள்ளது. இது உடலுக்கு நல்லது.