Author Topic: ~ மைசூர் மசாலா தோசை :- ~  (Read 458 times)

Offline MysteRy

~ மைசூர் மசாலா தோசை :- ~
« on: August 11, 2015, 08:50:50 PM »
மைசூர் மசாலா தோசை :-



தேவையானவை:

இட்லி அரிசி - 2 கப்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
அவல் - 1/4 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்புமா ரவை - 1 கப்,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
உருளைக்கிழங்கு மசாலா,
வெங்காய சட்னி,
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

அரிசி, வெந்தயம், பருப்பை ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் முதலில் அவலை அரைத்து, பின்பு அரிசி, பருப்பைப் போட்டு நன்றாக அரைக்கவும்.
அரைத்த மாவை உப்புச் சேர்த்து 12 மணிநேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவில் ரவை, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும்.
மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.
தோசையை மூடி வைத்து ஒரு பக்கம் மட்டும் எண்ணெய் ஊற்றி சுடவும்.
வெங்காய சட்னியை தோசை மேலே தடவி உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து முக்கோணமாக மடித்து மேலே சிறிதளவு வெங்காயத்தை வைத்து சூடாகப் பரிமாறவும்.