Author Topic: ~ வாழைப்பூ கோலா உருண்டை...!! ~  (Read 376 times)

Offline MysteRy

வாழைப்பூ கோலா உருண்டை...!!



தேவையான பொருட்கள்:-

கடலைப்பருப்பு -- 1 கப்
துவரம்பருப்பு -- 1 tsp
சோம்பு -- 1 tsp
இஞ்சி -- சிறு துண்டு
பூண்டு -- 2 பல்
காய்ந்த மிளகாய் -- 7 [காரத்திற்கு ஏற்ப]
உப்பு -- தேவையான அளவு
வாழைப்பூ -- 1 கப் [பொடியாக நறுக்கியது]
எண்ணெய் -- தேவையான அளவு

செய்முறை:-

பருப்பை நன்றாக கழுவி.., ஒருமணி நேரம் ஊற வைக்கவும்...

பின்பு ஊறவைத்த தண்ணீரை வடித்துவிட்டு.., சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் எல்லாம் சேர்த்து மசால் வடைக்கு அரைப்பது போல.., கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கடைசியில் பொடியாக நறுக்கி வைத்த வாழைப்பூவையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தி விடவும். [நைசாக அரைக்க கூடாது....]

இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

சுவையான கோலா உருண்டை ரெடி...