Author Topic: ~ வரகு கஞ்சி ~  (Read 339 times)

Offline MysteRy

~ வரகு கஞ்சி ~
« on: August 07, 2015, 04:32:11 PM »
வரகு கஞ்சி



சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவைத்து, பாதி அளவு வெந்ததும், பூண்டு 10 பல், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள, சிறிது எண்ணெயில் உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தேவையான உப்பு, புளி போட்டு அரைத்த கறிவேப்பிலைத் துவையல் அருமையாக இருக்கும்.

பலன்கள்
நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள், மிக அதிகம். மாவுச்சத்தும் குறைவு. விரைவில் செரிமானமாகும். உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். கறிவேப்பிலை இளநரையை போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. தினமும், வரகு கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைக்கலாம்.