Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா? ~ (Read 517 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா? ~
«
on:
August 05, 2015, 09:36:22 PM »
இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா?
இந்தியாவில் சாதம் மற்றும் சப்பாத்தி தான் மக்களால் அதிகம் சாப்பிடப்படுகிறது. அப்படி உண்ணும் உணவுகளில் ஆரோக்கியமானது சாதமா அல்லது சப்பாத்தியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். ஆனால் உண்மையில் எந்த ஒரு உணவையுமே அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!! இப்படி ஒரு சந்தேகம் எழுவதற்கு முக்கிய காரணம், இக்காலத்தில் பலர் அவஸ்தைப்படும் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதரை ஆரோக்கிய பிரச்சனைகள் தான். எனவே சாதம் அல்லது சப்பாத்தியில் எது ஆரோக்கியமானது என்று ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சாதம் பலர் சாதம் சாப்பிட்டால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். அது உண்மையா? பொதுவாக இக்காலத்தில் உள்ள அரிசி எல்லாம் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அரிசியின் மேல் உள்ள நார்ச்சத்தான தவிடு முற்றிலும் நீக்கப்படுகிறது. அதிலும் சமைக்கும் போது அரிசியை நன்கு கழுவுவதால், அதில் ஒட்டிக் கொண்டுள்ள மிஞ்சிய சத்தும் நீரில் போய்விடுகிறது. இதனால் அரிசியில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவையும் போய்விடுகிறது.
கைக்குத்தல் அரிசி வேண்டுமெனில் வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது பாலிஷ் செய்யப்படாதது. மேலும் இது சப்பாத்தியை விட ஆரோக்கியமானதும் கூட.
சாப்பாத்தி சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மாவில் நார்ச்சத்து (சலிக்காமல் இருந்தால்), புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், செலினியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இவ்வளவு சத்துக்களை கோதுமை தன்னுள் அடக்கியுள்ளதால், சப்பாத்தி சாதத்தை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
சோடியம் மற்றும் பொட்டாசியம் சப்பாத்தியில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆனால் சாதத்தில் சோடியம் (உப்பு சேர்க்காமல் இருந்தால்) குறைவு மற்றும் பொட்டாசியமும் அளவாகத் தான் உள்ளது. எனவே சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டியவர்கள், சப்பாத்தியைத் தவிர்த்து, சாதத்தை எடுப்பது நல்லது.
சாதம் எளிதில் செரிமானமாகும் சாதத்தில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அது எளிதில் செரிமானமாகும். எனவே வயிற்றுப் போக்கு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், சாதத்தை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி தான் சிறந்தது. ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் சாதத்தை தவிர்ப்பது தான் நல்லது.
உடல் பருமன் உடல் பருமன் உள்ளவர்கள், நார்ச்சத்து அதிகம் நிறைந்த சப்பாத்தியை சாப்பிடுவது தான் நல்லது. எப்போதும் சாதத்தையே சாப்பிட்டு வந்தால், அதிலும் இரவில் சாப்பிட்டால், உடல் பருமன் அடையும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இவற்றில் எது ஆரோக்கியமானது - சாதமா? சப்பாத்தியா? ~