« Reply #1 on: August 04, 2015, 08:43:20 PM »
பாதாம் பால்
முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்,டு அதில் 10-12 பாதாம் பருப்புகளை ஊறவைக்க வேண்டும். மறுநாள், தண்ணீரை வடிகட்டி பாதாம் பருப்புடன் ஒரு குவளை குடிநீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். பாதாம் பால் ரெடி. இனிப்புச் சுவை விரும்புவர்கள் பாதாம் பருப்புடன் இரண்டு விதை நீக்கிய பேரீச்சம் பழம் சேர்த்தும் அரைக்கலாம்.
பலன்கள்:
இதயத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும். புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி6, இ ஆகியவையும் கிடைக்கும். பாதாம் தோலில் இருக்கும் ஃபிளவனாய்ட், இதயத்துக்குப் பலம் சேர்க்கும். பாதாம் பாலை நான்கு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பயன்படுத்த முடியும்.
« Last Edit: August 04, 2015, 08:49:24 PM by MysteRy »

Logged