Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~  (Read 680 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« on: August 04, 2015, 04:55:48 PM »


எந்த ஸ்வீட் செய்தாலும், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடி செய்து சேர்த்தால், சுவை கூடும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #1 on: August 04, 2015, 04:56:22 PM »


சாம்பார் பொடி தயாரிக்கும்போது, ஒரு துண்டு சுக்கையும் தட்டிப் போட்டு அரைத்தால், பருப்பினால் உண்டாகும் வாயுத்தொல்லை இருக்காது.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #2 on: August 04, 2015, 04:56:52 PM »


ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து, மோரில் கரைத்து, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால்... வயிற்றுப்போக்கு, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #3 on: August 04, 2015, 04:57:21 PM »


வெயில் காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக்கொள் வது நல்லது. வெல்லம் சூட்டைக் குறைப்பதுடன். இரும்புச் சத்தையும் அளிக்கவல்லது.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #4 on: August 04, 2015, 04:57:51 PM »


அடிக்கடி இருமல், தும்மல் ஏற்படுகிறதா? அகத்திக் கீரை, அகத்திப்பூ சாறுகளுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #5 on: August 04, 2015, 04:58:23 PM »


ஒரு பிடி அவலை ஊறவிட்டு... சிறிதளவு மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்து பால்விட்டு அரைத்து, புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் செய்தால், புளிப்பே இருக்காது.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #6 on: August 04, 2015, 04:58:59 PM »


சமைத்த பாத்திரங்களில் உள்ள எண்ணெய்ப் பசையை எளிதாக சுத்தம் செய்ய ஓர் உபாயம்... ஐஸ் க்யூப் ஒன்றைப் போட்டு, க்ளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்தால், பளிச் என்று ஆகிவிடும்.