Author Topic: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~  (Read 1897 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #15 on: August 04, 2015, 01:42:07 PM »
சீரக ரசம்



தேவையானவை:

 பருப்புத் தண்ணீர் - 2 கப், நீர்க்க கரைத்த புளித் தண்ணீர் - ஒரு கப், தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகம் - இரண்டரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டுப் பல் - 3 (நசுக்கிக்கொள்ளவும்), கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சீரகம், கறிவேப்பிலையை மையாக அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். பருப்புத் தண்ணீருடன் அரைத்த சீரக விழுது, தக்காளி விழுது, நசுக்கிய பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். வாணலி யில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து... பருப்புக் கலவையை சேர்த்து, நுரைத்து கொதி வரும் சமயத் தில் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #16 on: August 04, 2015, 01:44:13 PM »
மோர் ரசம்



தேவையானவை:

 மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், மிளகு - தலா கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.

செய்முறை:

வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். மோருடன் மஞ்சள்தூள், கறிவேப் பிலை, பெருங்காயத்தூள், ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மோர் கரை சலை ஊற்றி நுரைத்து வரும் சமயம் வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலந்து, கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #17 on: August 04, 2015, 01:45:22 PM »
கார்ன் ரொட்டி



தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள்  - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஸ்வீட் கார்ன் முத்துக்கள், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது, உப்பு, நெய், எலுமிச்சைச் சாறு, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #18 on: August 04, 2015, 01:46:39 PM »
ராகி - சிவப்பு பூசணி  ரோஸ்ட்



தேவையானவை:

கேழ்வரகு மாவு - 2 கப், சிவப்பு பூசணி துருவல் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 சிவப்பு பூசணி  துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கேழ்வரகு மாவுடன் அரைத்த சிவப்பு பூசணி விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண் ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #19 on: August 04, 2015, 01:47:47 PM »
சுரைக்காய் பால் கூட்டு



தேவையானவை:

மீடியம் சைஸ் சுரைக்காய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, வேகவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 சுரைக்காயை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிள காயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சுரைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன்  சேர்த்து தீயைக் குறைத்து, வாணலியை மூடி வைக்கவும். காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாக சேர்ந்தாற்போல் வரும்போது நன்கு கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #20 on: August 04, 2015, 01:48:56 PM »
சிறுகீரை கடையல்



தேவையானவை:

சிறுகீரை - ஒரு கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பழுத்த நாட்டுத் தக்காளி - 4, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். வாணலி அல்லது மண் சட்டியில் நெய் விட்டு, சீரகம் தாளித்து... அரைத்த தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கீரை, மிளகாய்த்தூள், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து வேகவிடவும் (தேவையெனில் கால் கப் நீர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). கீரை வெந்த பின் இறக்கி, நன்கு கடையவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #21 on: August 04, 2015, 01:50:05 PM »
ஈஸி மோர்க்குழம்பு



தேவையானவை:

 புளிக்காத கெட்டித்தயிர் - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, மிளகு - தலா கால் டீஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தயிரை நன்கு கடைந்து மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டுக் கரைக்கவும். வாணலி யில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, மோர்க்கரைசலை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #22 on: August 04, 2015, 01:51:28 PM »
தேங்காய்ப்பால் ரைஸ்



தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப், தேங்காய் - அரை மூடி (ஒரு கப் பால் எடுத்துக்கொள்ளவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 4, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:

பெரிய வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும், பட்டை, லவங்கம் தாளித்து... வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேங்காய்ப் பால், முக்கால் கப் நீர், தேவையான உப்பு சேர்க்கவும். இதில் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். கொத்த மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #23 on: August 04, 2015, 01:52:39 PM »
சுண்டைக்காய் குழம்பு



தேவையானவை:

பச்சை சுண்டைக்காய்,  சின்ன வெங்காயம் - தலா 10, கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தக்காளி - 2, வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #24 on: August 04, 2015, 01:53:53 PM »
ஹனி சப்பாத்தி



தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப், தேன் - 3  டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் கலக்கவும். பிசைந்த மாவை  சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் - எண்ணெய் கலவையை விட்டு சுட்டு எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #25 on: August 04, 2015, 01:55:08 PM »
முளைக்கீரை மசியல்



தேவையானவை:

முளைக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 4 பல், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒரு முறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #26 on: August 04, 2015, 01:56:21 PM »
பூண்டுக் குழம்பு



தேவையானவை:

பூண்டு - 20 பல்,  சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், வெல்லத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

செய்முறை:

பூண்டு, சின்ன வெங் காயத்தை தோல் உரிக்கவும். தக் காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை, வெந்தயம் தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும். பிறகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக அரைத்த தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், மிள காய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டி யானதும் வெல்லத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #27 on: August 04, 2015, 01:57:44 PM »
புழுங்கலரிசிக் கஞ்சி



தேவையானவை:

 புழுங்கல் அரிசி ரவை - அரை கப், பூண்டு - 6 பல், மோர் - 2 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசி ரவையுடன் நீர் சேர்த்து... தோல் உரித்து, பொடியாக நறுக்கிய  பூண்டையும் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெந்தவுடன் ஆறவிட்டு... மோர், தேவையான உப்பு சேர்த்துப் பருகவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #28 on: August 04, 2015, 01:59:05 PM »
பம்ப்கின் கிரேவி



தேவையானவை:

வெள்ளைப் பூசணி - கால் கிலோ, கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பூண்டு - 3 பல் (நசுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளைப் பூசணியை தோல், விதை, நீக்கி பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.  வேகவைத்த பருப்பை வாணலியில் போட்டு, நறுக்கிய வெங்காயம், பூசணி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு நன்கு வேகவிடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூசணி கிரேவியில் சேர்த்துக் கலந்து, இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல்! ~
« Reply #29 on: August 04, 2015, 02:00:17 PM »
க்ரீன் உப்புமா



தேவையானவை:

அரிசி ரவை - ஒரு கப், கொத்தமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், புளி ஆகிய வற்றை ஒன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இரண்டரை கப் நீர் சேர்க்கவும். இதில் அரைத்த கொத்தமல்லி விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்து நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்), வேகவிடவும். வெந்த பின் நன்றாக கிளறி, சுடச்சுட பரிமாறவும்.