Author Topic: பராசக்தியிடம் நான் கேட்பவை  (Read 402 times)

Offline thamilan

அச்சங்கள் தெளிய  வேண்டும்
அறியாமை அகல வேண்டும்
ஆணவம் அழிய வேண்டும்
அமைதி எங்கும் நிலவிட வேண்டும்
ஏற்றங்கள் எதிலும் வேண்டும்
மாற்றங்கள் மனிதரில் வேண்டும்
சிந்தனைகளில் இளமை வேண்டும்
அறிவுதனில் முதிர்ச்சி வேண்டும்
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஆலைகள் வேண்டும்
நெஞ்சோடு நியாயங்கள் வாழவேண்டும்
சாகும் வரை தேயாத இளமை வேண்டும்
சீரியல்கள் இல்லாத சேனல்கள் வேண்டும்
சிரிப்பதற்கு கொஞ்சம் நேரமும் வேண்டும்
ஆறுதல் சொல்கின்ற சொந்தங்கள் வேண்டும்
அறிவுரை சொல்கின்ற நட்புகள் வேண்டும்