Author Topic: ~ காலிஃப்ளவர் 65 ~  (Read 362 times)

Offline MysteRy

~ காலிஃப்ளவர் 65 ~
« on: July 29, 2015, 11:15:19 AM »
காலிஃப்ளவர் 65



காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது),
தயிர் - 100 மி.லி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கேசரி பவுடர் - 1 சிட்டிகை,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை நீரில் போட்டு, சிறிது நேரம் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த கலவை அதிக நீராகவோ, கெட்டியாகவோ இருக்கக்கூடாது. பின் அதில் காலிஃப்ளவரை போட்டு நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் 65 ரெடி!!