Author Topic: வரும்முன் காப்போம்  (Read 1517 times)

Offline Global Angel

வரும்முன் காப்போம்
« on: December 25, 2011, 10:39:20 PM »
வரும்முன் காப்போம்


நோயின்றி வாழ...




“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப நோய் வரும்முன் காத்துக்கொள்வதே நலம்.

மனிதனைத் தாக்கும் நோய்கள் அனைத்திற்கும் மூலக் காரணம் மனிதனே.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்ற கனியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கேற்ப நோய்கள் தாக்கத்திற்கு மனிதனே இடம் கொடுத்து தன் உடலில் வளர்க்கின்றான்.  ஆம்.. தன்னுடைய உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி வாழும் மனிதனின் உடம்பு நோய்களின் தொழிற்சாலைகளாகின்றன.  இவற்றின் பாதுகாப்புக்கு பயந்து மனிதன் தங்களை மாய்த்துக் கொள்கின்றான்.  அல்லது நோய் வாய்ப்பட்டு வாழ்நாள் முழுவதும் அவதி யுறுகின்றான். 

இந்த நிலைக்குக் காரணம் நோய் வரும்முன் காப்பதற்கான வழிகளை கடைபிடிக்காமையே...
நம் முன்னோர்கள் தினமும் காலையில் நீராகாரம் பருகி வயலில் கடுமையாக வியர்வை சிந்த வேலைபார்த்தனர்.  அவர்கள் உணவு முறைகள் பழக்கவழக்கங்களால் நோயில்லாமல் நூறாண்டு வாழ்ந்தார்கள்.  அவர்களில் யாருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருந்ததில்லை.

ஆனால் இன்றோ நாம் சந்திக்கும் நபர்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் மேலே சொன்ன நோய்களால் அவதிப்படுகின்றனர்.  பெண்களின் நிலையோ இதைவிட அதிகம்.  அவர்கள் கை, கால், மூட்டு, இடுப்பு, கழுத்து வலி என பலவகை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.  மெனோபாஸ் காலத்தில் இவர்களின் உடலில் ஏற்படும் சத்துக் குறைவால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

பழங்கால பாட்டிகளின் வேகம் கூட தற்போது இளம் பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
60 வயதிலும் கண்ணாடி அணியாமல் பேப்பர் படிக்கும் பெரியவர் அருகிலிருக்கும் பேரக்குழந்தை பள்ளிப் படிப்பின் போதே கண்ணாடி அணியும் நிலைக்கு காரணம் நாமேதான்.

நோய் வருவதற்கான காரணங்கள் பற்றி மறைமலை அடிகளார் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.

· தூய்மையான காற்றும், சூரிய ஒளியும் உட்புகாத இடங்களில் நீண்ட நாள் வசிப்பது..

· காலத்திற்கேற்ப உடம்பின் தட்ப வெப்ப நிலைகள் மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதது.

· தலை குளிப்பதற்கும், நீர் அருந்துவதற்கும் மற்ற வேலைகளுக்கும் உபயோகப்படுத்தும் நீரின் தன்மைகளை சரிவர அறிந்து கொள்ளாமல் பயன் படுத்துவது.

· வீடுகளில் குப்பை நிறைந்ததாகவும், அழுக்காகவும் வீட்டைச் சுற்றி துர்நாற்றங்களை கொடுக்கக் கூடிய கழிவு நீர்களும் தேங்கியிருப்பது.

· மாசடைந்த நீரிலுள்ள மீன், பறவை முதலியவற்றின் உணவுகளை உண்பது.

· சைவ உணவிலும் நச்சு கலந்த காப்பி, தேயிலை, கொக்கோ, மரப்புளி, மிளகாய் முதலியவற்றை சாப்பிடுவது

· துரு களிம்பு உள்ள பாத்திரங்களில் உணவு சமைத்து சாப்பிடுவது.

· உடம்பின் நிலையறியாமல் அடிக்கடி தலை குளிப்பது,

· பல நாட்கள் குளிக்காமல் இருப்பது.

· தினமும் தூய ஆடைகளை அணியாமல், அழுக்கான ஆடையை அணிந்திருப்பது.

· அளவிற்கு மிஞ்சிய கோபம், துயரம், கவலை பயம் அடைதல்.

· உரத்த குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது.

· எப்போதும் யாருடனாவது ஏட்டிக்குப் போட்டியாக பேசிச் சண்டையிடுவது.

· உடம்பின் சக்திக்கு மீறின செயல்கள் அதாவது ஓடுதல், குதித்தல் செய்தல்.

· உடலுக்குத் தேவையான உடற் பயிற்சியின்மை.

· தொற்று நோய் உள்ளவர்களிடம்  நெருங்கிப் பழகுதல்.

· தொற்று நோய் உள்ள காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை செய்யாமலிருத்தல்.

· அதிக அளவு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல்.

· பசியின்மையின் போது அடுத்தடுத்த உணவுகளை சாப்பிடுதல்.

· நன்கு பசிக்கும் போது உணவு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது.

· தூங்காமல் விழித்திருப்பது.

· எந்த நேரமும் உறங்கிக்கொண்டிருப்பது.

· அளவுக்கு மிஞ்சி எந்நேரமும் படித்தல்.

· அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பது.

· ஓய்வில்லாமல் உழைப்பது.

இவைதான் நோய் வருவதற்கான காரணங்கள் என்கிறார் மறைமலை அடிகளார்.  ஆம் நோய் வரும் காரணங்களை அறிந்து அவற்றைத் தவிர்த்தோ மானால் நோயின்றி நூறாண்டு வாழலாம்.
                    

Offline RemO

Re: வரும்முன் காப்போம்
« Reply #1 on: December 28, 2011, 06:50:38 AM »
Nala payanula thagaval angel