Author Topic: ~ தக்காளி சாம்பார் ~  (Read 483 times)

Online MysteRy

~ தக்காளி சாம்பார் ~
« on: July 19, 2015, 09:38:55 PM »
தக்காளி சாம்பார்



தேவையான பொருட்கள்:

*வேகவைத்த துவரம்பருப்பு – 1/2கப்
*மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
*உப்பு – தேவைக்கேற்ப
*கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்
*தக்காளி – 2 அரிந்து கொள்ளவும்

எண்ணெயில் வதக்கி:அரைக்கவும்:

*சீரகம் – 1 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் – 7
*பொடியாக நறுக்கிய தக்காளி – 1/4 கப்
*தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
[அரைக்கும் போது தேங்காய் சேர்க்கவும்]

செய்முறை:

1. பருப்பை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் விட்டு, மற்ற பொருட்களையும் அரைத்த விழுதையும் சேர்த்து சேர்க்கவும்.
3. பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
4. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கறிக்கவும்.