Author Topic: ~ பாட்டி வைத்தியம் கருத்தரித்த பெண்களுக்கு ~  (Read 445 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாட்டி வைத்தியம் கருத்தரித்த பெண்களுக்கு



மகப்பேறு காலத்தில் பயன்படுவது

தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி கீரை
நெய்

செய்முறை:

கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.

மருத்துவக்குணங்கள்:

கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதனால் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் தாக்காது.

இத்தகைய நன்மைகள் நிறைந்த இந்த “கொத்தமல்லி தழையை” நாம் நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

வயிற்றுவலி குறைய

அறிகுறிகள்:

கர்ப்பவதிகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
சீரகம் தூள்.
நெய்.

செய்முறை:
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடேற்றி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியின்படும்படி ஒவ்வொன்றாக வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.

வலி குறைய

அறிகுறிகள்:

பேறு கால வலி.

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை.
கொத்தமல்லி.

செய்முறை:
முருங்கை இலை 10 கிராம், கொத்தமல்லி 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நீர் விட்டு நன்கு வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் பேறு கால சமயங்களில் ஏற்படும் வலி குறையும்

ஆரோக்கியமான பிரசவத்திற்கு

அறிகுறிகள்:

கர்ப்பிணி பெண்கள்.

தேவையான பொருட்கள்:

ஆடுதீண்டாப்பாளை வேர்.

செய்முறை:
ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் குறைந்து ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

சீறுநீர் வெளியேற

அறிகுறிகள்:

சீறுநீர் பிரியாமை.

தேவையான பொருள்கள்:

இளநீர்.
பனங்கற்கண்டு.

செய்முறை:

கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் சீறுநீர் ந‌ன்றாக‌ பிரியும்