Author Topic: ~ உங்களுக்கு இருக்கும் தொப்பை எந்த வகை? ~  (Read 323 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்களுக்கு இருக்கும் தொப்பை எந்த வகை?



உங்களுக்கு இருக்கும் தொப்பை எந்தவகை என்பதை அறிந்துகொண்டால் நீங்கள் அதனை ஈஸியாக குறைத்துவிடலாம்.

கீழே இருக்கும் இரு புகைப்படங்களையும் பார்க்கவும்

இடப்புறம் இருப்பவர் தொப்பை ஆபத்து குறைவான தொப்பை. ஆபத்து குறைவான தொப்பை என்பது சதையை கிள்ளி பிடிக்க முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும்.

காரணம் அதில் உள்ல கொழுப்பு subcutaneous fat எனும் வகை கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு.

வலப்புறம் இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை கிள்ளுவதும், நகர்த்துவதும் சிரமம். இவருக்கு இருக்கும் தொப்பை ஆபத்தான கொழுப்பால் நிரம்பிய தொப்பை. இவருக்கு உள்ல கொழுப்பு Visceral fat எனப்படும்.

இதுதான் மிக ஆபத்தான கொழுப்பு. இந்த வகை கொழுப்புதான் மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிலவகை புற்றுநோய்களை வரவழைக்கும்.

உங்களுக்கு இந்த இரண்டில் எந்த வகை தொப்பை இருக்குது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

இஞ்சு டேப்பை எடுங்கள். கீழே படுத்துகொண்டு வயிற்றின் சுற்றளவை (தொப்புளுக்கு மேல் உள்ள சுற்றளவு) டேப்பால் அளவுங்கள்.

அடுத்து எழுந்து நின்று கொண்டு அதே அளவை மீண்டும் எடுங்கள். இரண்டு அளவுக்கும் வித்தியாசம் 1 இஞ்சுக்கும் கீழே என்றால் உங்களுக்கு இருப்பது ஆபத்தான visceral கொழுப்பு.

ஒரு இஞ்சுக்கும் அதிகமான வித்தியாசம் இரண்டு அளவுக்கும் உள்ளது என்றால் நீங்கள் தப்பினீர்கள். உங்களுக்கு இருப்பது ஆபத்து குறைவான வகை கொழுப்பு.