Author Topic: ~ திருமணப் பொருத்த அட்டவணை ~  (Read 979 times)

Online MysteRy

திருமணப் பொருத்த அட்டவணை



நீங்கள் ராட்சச கணமா? இல்லை மனித கணமா?

மொத்த நட்சத்திரங்கள் 27 ஆகும். அதை 9 நட்சத்திரங்களுக்கு ஒரு 'கணம்' என்ற அடிப்படையில் மூன்று பகுதியாக முன்னோர்கள் பிரித்திருக்கிறார்கள்.

தேவ கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், மனித கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், ராட்சச கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும் மனிதர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று பிரிவில் எந்த கணத்தை, எந்த கணத்தோடு சேர்த்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். அதற்கு 'கணப்பொருத்தம்' என்று அழைப்பது வழக்கம். அந்த கணப்பொருத்தம்தான் குணப்பொருத்தம் என்பது.

விவாகத்தில் தொடங்கிய வாழ்க்கை, விவகாரம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும், விவாகரத்து ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும் கணப்பொருத்தம்தான் அவசியமாகும். தேவ கணத்தைச் சேர்ந்த ஆணிற்கு, மனித கணத்தைச் சேர்ந்த பெண் பொருத்தமற்றது என்பார்கள். அதே போல ராட்சச கணத்தை சார்ந்த பெண்ணிற்கு மனித கணத்தைச் சார்ந்த ஆண் பொருத்தமற்றது என்பார்கள். தம்பதியர் இருவருக்கும் ராசி அதிபதிகள் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரின் ராசி அதிபதிகளும் நட்பு கிரகமாக இருந்தாலும் பெண் ராட்சச கணம் சேர்க்கலாம் என்பர்.

ஒற்றுமையும், மங்கலமும் தரும் கணப்பொருத்த விவரம்!

தேவகணம் - மனித கணம் - ராட்சச கணம்
அசுவினி - பரணி - கார்த்திகை
மிருகசீரிஷம் - ரோகிணி - ஆயில்யம்
புனர்பூசம் - திருவாதிரை - மகம்
பூசம் - பூரம் - சித்திரை
ஹஸ்தம் - உத்திரம் - விசாகம்
சுவாதி பூராடம் - கேட்டை
அனுஷம் - உத்திராடம் - மூலம்
திருவோணம் - பூரட்டாதி - அவிட்டம்
ரேவதி - உத்திரட்டாதி - சதயம்

வரன்கள் ஜாதகத்தில், 'தசாபுத்தி சந்திப்பு' இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.செவ்வாய் தோஷம், சனி தோஷம் சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம்.
இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். முன்னேற்றம் கிடைக்கும்.

பத்துப்பொருத்தங்கள் எவை எவை?

1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசி அதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை

பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷப ராசி)

வ. ஆணின் நட்சத்திரம், - ராசி அமையும் - மொத்தப்
பொருத்தங்கள் பொருத்தம்

1. அஸ்வினி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
2. பரணி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
3. கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) பொருத்தம் உண்டு - 7
4. கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) பொருத்தம் உண்டு - 7
5. ரோஹிணி (ரிஷபம்) 1, 5, 6, 7, 9, 10 - 6
6. மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்) 5, 6, 7, 9, 10 - 5
7. மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்) 5, 7, 9, 10 - 4
8. திருவாதிரை (மிதுனம்) 1, 3, 5, 7, 9, 10 - 6
9. புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்) ரஜ்ஜூ தட்டும் -
10. புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) ரஜ்ஜு தட்டும் -
11. பூசம் (கடகம்) 1, 5, 8, 9, 10 - 5
12. ஆயில்யம் (கடகம்) 2, 3, 5, 8, 9, 10 - 6
13. மகம் (சிம்மம்) 1, 2, 4, 5, 9, 10 - 6
14. பூரம் (சிம்மம்) 1, 4, 5, 9, 10 - 5
15. உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்) ரஜ்ஜு தட்டும் -
16. உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) ரஜ்ஜூ தட்டும் -
17. ஹஸ்தம் (கன்னி) 1, 4, 5, 7, 9, 10 - 6
18. சித்திரை 1, 2-ம் பாதம் (கன்னி) 2, 4, 5, 7, 9, 10 - 6
19. சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) 2, 4, 5, 6, 7, 8, 9,10 - 8
20. சுவாதி (துலாம்) 1, 3, 4, 5, 6, 7, 9, 10 - 8
21. விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) ரஜ்ஜூ தட்டும் -
22. விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) ரஜ்ஜூ தட்டும் -
23. அனுஷம் (விருச்சிகம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
24. கேட்டை (விருச்சிகம்) 2, 3, 4, 5, 6, 7, 9,10 - 8
25. மூலம் (தனுசு) 1, 2, 4, 5, 7, 9, 10 - 7
26. பூராடம் (தனுசு) 1, 4, 7, 9, 10 - 5
27. உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) ரஜ்ஜூ தட்டும் -
28. உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்) ரஜ்ஜூ தட்டும் -
29. திருவோணம் (மகரம்) 1, 4, 6, 7, 9, 10 - 6
30. அவிட்டம் 1, 2-ம் பாதம் (மகரம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7
31. அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7
32. சதயம் (கும்பம்) 1, 2, 3, 4, 5, 7, 9, 10 - 9
33. பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) ரஜ்ஜூ தட்டும் -
34. பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) ரஜ்ஜூ தட்டும் -
35. உத்திரட்டாதி (மீனம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
36 ரேவதி (மீனம்) 3, 4, 5, 6, 7, 9, 10 - 7