Author Topic: ~ இட்லி உப்புமா ~  (Read 364 times)

Offline MysteRy

~ இட்லி உப்புமா ~
« on: July 15, 2015, 11:10:39 PM »
இட்லி உப்புமா



தேவையானவை:

1. இட்லி - 10
2. கடுகு - தாளிப்பதர்க்கேற்ப
3. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
4. காய்ந்த மிளகாய் - 5
5. உளுந்து - 1/2 டீ ஸ்பூன்
6. கடலை பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
7. கறிவேப்பிலை - சிறிது
8. கொத்துமல்லி இலை - சிறுது
9. உப்பு - சுவைக்கேற்ப
10. எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்

செய் முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
2. பின் அதில் இட்லிகளை போட்டு சிறிது ஊறியதும் ஒவ்வொன்றாக எடுத்து நன்றாக பிழிந்து உதிர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
3. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் ,உளுந்து , கடலை பருப்பு போட்டு தாளித்து அதில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்
5 .பின் அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை போட்டு நன்றாக பிரட்டி அடி பிடிக்காமல் கிளறி இறக்கும் பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.