Author Topic: ~ முட்டை அடை குழம்பு ~  (Read 397 times)

Offline MysteRy

~ முட்டை அடை குழம்பு ~
« on: July 15, 2015, 11:06:19 PM »
முட்டை அடை குழம்பு



குழம்புக்கு தேவையானவை:

1. தேங்காய் - 1/2 மூடி
2. காய்ந்த மிளகாய் - 5
3. கொத்துமல்லி - 2 டீ ஸ்பூன்
4. சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
5. பட்டை - ஒரு துண்டு
6. கசகசா - 1/2 டீ ஸ்பூன்
7. ஏலக்காய் - 1
8. கிராம்பு - 3
9. பூண்டு - 10 பல்
10. இஞ்சி - ஒரு துண்டு
11. உப்பு - தேவையான அளவு
12. மஞ்சள் தூள் - சிறிது
13. தக்காளி - 4 (நறுக்கியது)
14. நறுக்கிய சின்ன வெங்காயம் - சிறிது
15. எண்ணெய் - ஒரு குழி கரண்டி
16. கொத்துமல்லி இலை - சிறிது

செய் முறை:

1. முதலில் வேக வைக்க தேவையானவைகளை ஒன்றாக கலக்கி ஆவியில் வேக வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
2. பின் காய்ந்த மிளகாய், கொத்துமல்லி, சோம்பு, பட்டை, கசகசா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து அரைத்து கொள்ளவும் , அதில் தேங்காவையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3. இஞ்சி , பூண்டு , இரண்டையும் விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும் .
4. பின் வாணலியை அடுப்பில் வைத்து , எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து, விழுதாக அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் .
5. தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினை சிறுது தண்ணீர், மஞ்சள். உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
6. குழம்பு நன்றாக கொதித்ததும் வெட்டி வைத்திருக்கும் முட்டை அடைகளை அதில் போட்டு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடத்தில் கொத்துமல்லி இலை தூவி இறக்கி வைக்கவும்.
7. சுவையான முட்டை அடை குழம்பு ரெடி . இது சாப்பாட்டுக்கு பிரமாதமாக இருக்கும்.