Author Topic: ~ மிளகின் மிகையான நன்மைகள்! ~  (Read 324 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிளகின் மிகையான நன்மைகள்!



நமது அன்றாட சமையலில் பயன்படும் மிளகு, அனேக மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘கே’, நார்ச்சத்து போன்றவை அடங்கி உள்ளன.

வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சினைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்குத் தீர்வு தரக்கூடியது மிளகு.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபகசக்திக் குறைபாடு இவற்றுக்கும் மிளகு நல்ல மருந்தாகும்.

மிளகின் மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம்…

மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம், தலைவலி போன்றவை குணமாகும்.

மிளகைச் சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும். அது மட்டுமின்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் மறையும்.

தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாகச் சரியாகும்.

மிளகை ஒரு ஸ்பூன் எடுத்துப் பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.