Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.! ~ (Read 365 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.! ~
«
on:
July 15, 2015, 07:51:09 PM »
காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.!
இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.
பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்
• பீர்க்கங்கா யில், நிறைவு கொழுப்பு மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து உணவு, வைட்டமின் சி, ரிபோப்லாவின், துத்தநாகம், தயாமின், இரும்பு, மக்னீசியம் மற்றும் மாங்கனீசு அதிகமா உள்ளது.
• இரத்தம் சுத்தப்படும் பண்புகள் உள்ளது.
• இது இன்சுலின் போன்ற புரதக்கூறுகளுடன், ஆல்கலாய்டுகள் மற்றும் சரந்தின் கொண்டுள்ளது, இது அனைத்தும் அதிகரிக்கும் இரத்த இன்சுலின் அளவுகளை அதிகரிக்காவும், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவுகளை குறைக்க ஒன்றாக செயல்படுகிறது.
• இதில் உயர் பீட்டா கரோட்டின் உள்ளது, அது கண்களை நல்லது.
• பீர்க்கங்காய் வயிற்றுக்கு நல்லது, அதில் ஸெல்யுலோஸ் இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
• குடிப்தால் ஏற்படும் கல்லீரல் பதிப்பை தூய்மைப்படுத்துவதற்கு, மீட்டெடுக்க மற்றும் உணவூட்டுக்கு உதவுகிறது.
• இது உடல் எடை குறைக்க உதவுகிறது.
• இது படை, தடிப்பு தோல் அழற்சிக்கு எதிராக தோல் பராமரிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
• மூல வியாதி குணப்படுத்தும்.
• காலையில் பீர்க்கங்காய் சாறு ஒரு க்லாஸ் குடிப்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எந்த வித நோய் தோற்றி ஏற்படாமல் பாதுகாக்கும்.
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும்.
பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். முத்திய பீக்கங்கையின் நரம்பு கூடு குளிக்கும்போது அழுக்கு தேய்க்கும் சிறந்த இயற்கை பொருள்.
கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.! ~