Author Topic: ~ 30 வகை பிரெட் சமையல் ~  (Read 2563 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #15 on: July 13, 2015, 02:26:59 PM »
பிரெட் வடை



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #16 on: July 13, 2015, 04:45:22 PM »
பிரெட் சூப்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4, தக்காளி - 6, மிளகுத்தூள் நெய் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கோஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூடாக குடித்தால் 'சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #17 on: July 13, 2015, 04:46:46 PM »
பிரெட் சப்பாத்தி



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #18 on: July 13, 2015, 04:48:14 PM »
பிரெட் குணுக்கு



தேவையானவை:

பிரெட் - 10 துண்டுகள், வெங்காயம், பேபிகார்ன் - தலா 2, பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

சாஸ் தொட்டு சாப்பிடலாம். வாயில் போட்டதும் 'நறுக்’கென இருக்கும் இந்தக் குணுக்கு.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #19 on: July 13, 2015, 04:49:28 PM »
பிரெட் கேக்



தேவையானவை:

பிரெட் - 6 துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்., சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை:

  பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #20 on: July 13, 2015, 04:50:56 PM »
பிரெட் சாலட்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 6, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1, முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை - தலா 50 கிராம், எலுமிச்சம்பழம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி,  கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #21 on: July 13, 2015, 04:52:22 PM »
பாவ் பாஜி



தேவையானவை:

பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.

பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #22 on: July 13, 2015, 04:53:44 PM »
பிரெட் ஜாமூன்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4, சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் - தலா 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

பால் பவுடருக்குப் பதிலாக ஜாமூன் மிக்ஸ் சேர்த்தும் இதை செய்யலாம். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #23 on: July 13, 2015, 04:55:01 PM »
பிரெட் ரெய்தா



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4, புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #24 on: July 13, 2015, 04:56:27 PM »
புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்



தேவையானவை:

 பிரெட் துண்டுகள் - 10, புதினா - ஒரு கைப்பிடி, உரித்த பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 1, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - சிறிதளவு, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை:

புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து  விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #25 on: July 13, 2015, 04:57:54 PM »
பிரெட் ஊத்தப்பம்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10, புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் - தலா 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #26 on: July 13, 2015, 04:59:22 PM »
பிரெட் நெய் அப்பம்



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 2 (பொடித்துக் கொள்ளவும்), அரிசி மாவு - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் - 4, பொடித்த வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #27 on: July 13, 2015, 05:00:51 PM »
பிரெட் உப்புமா



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், கேரட் - தலா 2, பச்சை மிளகாய் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #28 on: July 13, 2015, 05:02:26 PM »
பிரெட் பீட்ஸா



தேவையானவை:

 பீட்ஸா பிரெட் - 1, சீஸ் - 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை:

பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக 'கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பிரெட் சமையல் ~
« Reply #29 on: July 13, 2015, 05:03:50 PM »
பிரெட் கிரேவி



தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.