Author Topic: ~ மட்டன் உப்புக் கறி ~  (Read 324 times)

Online MysteRy

~ மட்டன் உப்புக் கறி ~
« on: July 12, 2015, 12:00:22 PM »
மட்டன் உப்புக் கறி



தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் – 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 10 பல்
உப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:

மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்