படுத்தவுடன்
படுக்கையை பகிர்ந்தது
நெருடலுடன் ஒரு கனவு. !!
காண்பதற்கு ஏதுமில்லாத
காட்சிப் பிழையுடன்,
கல்லெறிந்த குளம் போல
கனவின் முகம் காட்டாமல்
கண்ணாமூச்சி ஆடியது மனம்...!!
உருண்டு புரண்டதில்
உருவான கனவு
உள்ளத்தை உழுது விதைத்து,
உறவுகளின் உலகத்தில்
ஊர்ந்து வர தொடங்கியது..!!
கையில் பூ இருந்தாலும்
மூக்கை ஜன்னலில் நீட்டி
வேறு மணம் தேடும்
கையறு மனம் போல்,
உறவென எல்லாம் இருந்தும்
சருகென தவிக்க விட்டதாய்
கனவின் ஜீவன் பேசியது..!!
மீந்து போன
பழைய உணவாய்
சொந்த பந்தங்கள்,
உண்ணவும் முடியவில்லை
உதறவும் வழியில்லை என
கனவின் பதற்றத்துக்கு
உடல் வியர்த்து சிலிர்த்தது..!!
அந்தரத்தில் பறந்தாலும்
பம்பரத்தில் சுழன்றாலும்
உறவின் சூழலில்
இதுதான் நிச்சயமென
விதி சொன்ன பின்பு
வருந்தி என்ன செய்ய
விரும்பி தான் ஏற்போமென
கனவு மீள் பதிவிட்டது..!!
விழிப்பு தட்டியதும்
கண்ட கனவு
துண்டு துண்டானதாய் நினைவு,
யோசித்து பயனில்லை என
தண்ணீர் குடித்த போது
கண்ணீர் வந்தது
கைகழுவிய உறவுகள் நினைத்து...!!.
நான் படுத்திருக்கும் போது எல்லாம் என் நினைவில் வருவது ஒரே தளம் நண்பர்கள் இணையதளம் மட்டுமே ..
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா என்ற வரிகள் நம் நண்பர்களின் குடும்பத்துக்கு பொருந்தும்
இந்த தளம் என்னை நல்ல உள்ளங்களை பார்த்து அவர்களோடு ஒரு குடும்பமாக வாழ எனக்கு வாய்ப்பு அளித்து இருகின்றது என்றால் அது நம்ப நண்பகர்களின் இணைய தளமாகவே இருக்க முடியும் . ஒரு உயிர் இனொரு உயிரோடு இணைபர்த்தர்க்கு வல்லமை இந்த நண்பர்கள் தளத்திருக்கு உண்டு . ஒரு நீண்ட பாதையில் ஒரே சீரை ஒரே குடும்பமாய் போகும் போது அது கண்டிப்பா வெற்றியை தான் தேடி தரும் அது போல இந்த தளம் கண்டிப்பா உலக அளவினில் ஒரு நல்லதொரு வெற்றியை அடையும்
FTC MP3, Chat, FM, இப்படி எல்லா அம்சங்களையும் கொண்டு சிறப்பாக செயல்படும் நண்பர்கள் இணையத்தளம் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன் .
மறு ஜென்மம் வந்தாலும் இந்த இணையதல குடும்பத்தின் ஒருவனாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்