Author Topic: ~ எலுமிச்சை முறுக்கு ~  (Read 369 times)

Offline MysteRy

~ எலுமிச்சை முறுக்கு ~
« on: July 06, 2015, 07:00:06 PM »
எலுமிச்சை முறுக்கு 



தேவையானவை:

பச்சரிசி மாவு - 5 கப், பொட்டுக்கடலை - 2 கப், பச்சை மிளகாய் - 7, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்,  வெண்ணெய் - எலுமிச்சை அளவு,  உப்பு -  தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி மாவை நன்கு சலித்து, வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சரிசி மாவில் பொட்டுக்கடலை தூள், பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு, சீரகம், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். மாவை தேன்குழல் முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக வந்த பின் எடுக்க வேண்டும். மணம், சுவை இரண்டிலும் அசத்தலாக இருக்கும் இந்த முறுக்கு.