Author Topic: ~ உடல் எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்l ~  (Read 397 times)

Offline MysteRy

உடல் எடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ்l



உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள், ஆனால் நம் வீட்டில் வளரும் கற்றாழை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை பயன்படுத்தியே ஒரு சில மாதங்களில் உடல் எடை பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2இன்ச்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!