Author Topic: ~ விரால் மீன் குழம்பு ~  (Read 563 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ விரால் மீன் குழம்பு ~
« on: July 04, 2015, 11:08:49 PM »
விரால் மீன் குழம்பு



விரால் மீன் – அரை கிலோ,
புளி – 50 கிராம்,
பூண்டு – 10 பல்,
சின்ன வெங்காயம் – 15,
நாட்டுத் தக்காளி – 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 15,
தனியா – 6 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.

புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு மீனை போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூடி விடவும். நன்றாக கொதித்த பிறகு மீன் வெந்த பிறகு இறக்கவும்.